காயல்பட்டினம் நகரில் ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினம் நகரிலுள்ள ஆதரவற்ற - உழைக்க இயலாத - பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழமையாக வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு ரமழான் மாதத்தையொட்டி 38 ஏழைக் குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், நெய், சீனி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட 29 மளிகைப் பொருட்கள் அடங்கிய - ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான சமையல் பொருட்கள் அண்மையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை, பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்று வழங்கினார்.
|