தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 2) ரமழான் மாதம் துவங்குவதாக தமிழக அரசு காஜி முப்தி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார். சென்னையில் ரமழான் பிறை இன்று காணப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 2; இன்று பின்னேரம்) ரமழான் மாதம் துவங்குகிறது என்றும் தமிழ்நாடு அரசு காஜி அலுவலகம் சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டது.
1. புனித ரமளான் இப்போது ஏரக்குறைய......... posted byShameemul Islam SKS (Chennai)[01 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 6582
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் ஈடிணையில்லா பாக்கியங்களும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இக்கடிதம் உங்கள் யாவரையும் சீரிய நலத்தோடும் உயர்வான இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்கத்ட்டுமாக!
புனித ரமளான் இப்போது ஏரக்குறைய நம்மைத் தழுவி விட்ட நிலையில் இக்கடிதம் உங்களை சந்திக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
ரஜப் மாத ஆரம்பம் முதலே நம் இறுதித்தூதர் உயிரினும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மாதத்தை அடைவதற்காக பிரார்த்தனை செய்தார்கள்.
அதற்கு காரணமும் உண்டு. ஏனைய காலங்களில் நாம் செய்யும் ஒரு நற்ச்செயலுக்கு பத்து முதல் எழுனூறு வரை கூலி வழங்கப்படும் அதே வேளையில் ரமளானைப் பற்றி மேலோன் அல்லாஹ் கூறும்போது அதற்கு நானே கூலியாக உள்ளேன் என ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக வந்துள்ளது. அல்லாஹ்வே தன்னைக் கூலியாக்குகிறேன் என்றால் அதன் மதிப்பை நம்மால் அளந்துவிட முடியுமா.
ஆனால் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் புரிந்திருப்பார்கள் தானே. எனவே தான் இம்மாதத்தை அடைவதற்கென்றே பிரார்த்தனையில் ஈடுபட்ட நபியவர்கள் ஆரம்பம் முதலே நற்கருமங்கள் புரிவதில் முனைப்புடனும் திட்டங்களுடனும் செயல்பட்டார்கள். இரவில் நீண்ட நேரம் நின்று வணங்கி பாவமன்னிப்புக் கோருதலில் கசிந்துருகி, நரகின் தீங்கிலிருந்து பாதுகாப்பு கோரி,
பகலில் ஸஹர் உணவை மிகக் குறைவாக உண்டு, அதிகம் பசித்திருந்து, அதிகமதிகம் குர்ஆனை ஓதி, தான தர்மங்கள் புரிந்து, கடைசிப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் முழுமையாகத் தங்கி, இஃதிகாஃப் இருந்து, வரிந்துக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் கண்விழித்து இரவுத்தொழுகையில் ஈடுபட்டு, தம் மனைவியரையும் பிற நபித்தோழர்களையும் அவ்வாறே வணங்கச்செய்து லைலத்துல் ஃகத்ர் என்னும் இரவையும் அதில் முழுமையாக அடைந்து நன்மைகளில் முழுக்க முழுக்க நனைந்திட்ட நிலையில் அம்மாதத்தை விட்டும் வெளியேறினார்கள்.
நமது ரமளான் மாதங்கள் எப்படி கழிகின்றன?
இரவில் வீதி உலா, நண்பர்களோடு அரட்டை, ஃபர்ள் தொழுகையை மட்டும் முடிந்தால் தொழுது, மீதித் தொழுகைகளை விட்டு விட்டு, கண்டதையெல்லாம் சாப்பிட்டு பசியின் அருமை துளிகூட தெரியாமல், ஸஹர் நேர உணவில் ஃபுல் புடித்து, இஃப்தாரையும் கஞ்சியும் பழங்களும் சூழ வரவேற்று, இரவு வேளைகளை வீதியில் காரம், ஷட்டில் விளையாடிக் கழித்து, நண்பர்களோடு இரவு முழுதும் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு அரட்டை அடித்து, ஸஹர் வேளையில் இந்தச் சேனல் மாத்தி அந்தச் சேனல், மறுபடியும் அந்த்ச் சேனல் மாத்தி இந்தச்சேனல் என தொலைக்காட்சி பெட்டிக்குள் அங்கமாகி, பகலில் குறட்டை விட்டுத் தூங்கி என பாக்கியமற்ற முறையில் இம்மாதம் நம் கைகளை விட்டும் நழுவிச் செல்கிறது.
யார் ரமளானை அடைந்து மறுமை வெற்றிக்காக முயற்ச்சிக்கவில்லையோ அவர் நாசமாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பிரார்த்திக்க வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆமீன் எனக் கூரியதாக ஹதீஸின் கருத்து உள்ளது.
இந்த துர்ப்பாக்கிய நிலை நமக்குத் தேவைதானா? சிந்திக்க வேண்டும்.
எனவே இம்மாதத்தை துவக்கம் முதலே சரியாகத் திட்டமிட்டு இரவை இறைவனின் நெறுக்கத்தில் அழகிய கிராஅத்துடன் இரவுத் தொழுகையில் இமாம் ஓதக் கேட்டு, குறைவாகச் சாப்பிட்டு ஸஹர் செய்து, அதிகமதிகம் குர்ஆனை ஓதி, ஓதத் தெரியாவிடில் அதனை ஓதக்கற்று, அழகாக அதை ஓதுபவர்கள் அருகில் அமர்ந்து செவி தாழ்த்திக் கேட்டு, தான தர்மங்களை அதிகமதிகம் செய்து, வீண் பேச்சுக்களிலிருந்து விலகியிருந்து, கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து, முடியாவிடில் ஒரு மூன்று நாட்களாவது இறையில்லத்தில் தங்கி லைலத்துல் ஃகத்ர் இரவை முழுமையாக அடைந்திட முயற்ச்சித்தோமானால், மறுமையின் வெற்றியை மட்டுமல்லாமல் இம்மை வெற்றியையும் அடைந்தவர்களாக நாம் ஆக முடியும்.
3. வாழ்த்துக்கள். posted bys.s.md meerasahib (riyadh)[01 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6585
அஸ்ஸலாமு அலைக்கும். எனது அன்பு சகோதர,சகோதரிகளுக்கு ரமழான் நல் வாழ்த்துக்கள். அமல்கள் நல்ல புரிந்து, நோன்பு நோற்று இறைவனின் கருணையும்,பொருத்தத்தையும் பெறுவோமாக ஆமீன்.
அனைவர்கலுக்கும் எனது இனிய புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்.வல்ல நாயனின் அருளால் நாம் நன்மைகள் பல செய்து,நல்ல அமல்கள் செய்து, அல்லாஹுவின் மேலான அருளை பெருவோமாக. ஆமீன். நாம் அனைவர்களும் வேற்றுமை மறந்து ஒற்றுமை உடன் இணைத்து வாழ வல்ல நாயன் நமக்கு அருள் புரிவனாக .ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross