இக்ராஃ கல்வி சங்கம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு அனுசரணையாளர்கள் கோரி அச்சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 18 மாணவர்கள், 37 மாணவியர் உள்ளிட்ட 55 மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஜூலை 23 அன்று விண்ணப்பித்த மாணவர்கள் - துணைக்குழு உறுப்பினர்களால் நேர்க்காணலும் செய்யப்பட்டனர். அந்த நேர்காணலின் முடிவில், 54 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
எனினும் நடப்பு கல்வியாண்டில் உதவி தொகை வழங்க அனுசரணையாளர்கள் இதுவரை 37 மாணவர்களுக்கு மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஆகவே மீதமுள்ள 17 மாணவர்களுக்கான அனுசரணை (மாணவர் ஒருவருக்கு 5000 ரூபாய் வீதம்) வழங்க இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக காயல் நகரின் பொது நல அமைப்புகள், தனவந்தர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.
அனுசரணை செய்யவிரும்புவோர் இக்ராஃ கல்விச் சங்கத்தினை கீழ்க்காணும் தொலைப்பேசி, ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொலைப்பேசி -
+91 98653 46964 (ஏ.தர்வேஷ் முஹம்மது, நிர்வாக அலுவலர்)
+91 98655 09809 (கே.ஜே. சாஹுல் ஹமீத், செயலாளர்)
ஈமெயில் - iqrakpm@gmail.com
இவ்வருடம் அனுசரணை செய்துள்ளவர்கள் விபரம் காண இங்கு அழுத்தவும்.
தகவல்:
ஏ.தர்வேஷ் முஹம்மது,
நிர்வாக அலுவலர், இக்ராஃ கல்வி சங்கம்.
|