செய்தி எண் (ID #) 6826 | | |
செவ்வாய், ஆகஸ்ட் 2, 2011 |
பாதாள சாக்கடைத் திட்டம் முதற்கட்ட ஆய்வுப்பணி விரைவில் நடைபெறும்! நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4912 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு:
காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.
நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் 14 தற்காலிக பணியாளரை கொண்டு 4 ஆண்டுகளாக நகராட்சியில் சுகாதார வாகனங்கள், ஆணையர் அலுவலக ஈப்பு வாகனம், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், கணினி சம்பந்தமான பணிகள் அனைத்தும் செயல்பட்டு வருவதாகவும், இந்த தற்காலிக பணியாளர்களுக்கு இவர்கள் பெற்று வரும் ஊதியத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டுமென்றும் நகர்மன்ற உறுப்பினர் காசிராஜன் கோரிக்கை வைத்தார். அதனை கூட்டம் ஏற்றுக்கொண்டது.
பாதாள சாக்கடை திட்டம்:
காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் - அதனடிப்படையில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் கண்ணையா, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிராஜன், எம்.என்.சொளுக்கு, நோனா ஜாஃபர் சாதிக், எஸ்.ஐ.ரஃபீக், கணேசன் பால்ராஜ், சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், காஜா, திருத்துவராஜ், தீபா, செய்தலி ஃபாத்திமா, கிதுரு ஃபாத்திமா, ஜெய்னம்பு, அஹ்மத் ஃபரீதா, கிதுரு ஃபாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி:
தினமலர் (02.08.2011) |