கோழிக்கோடு - காயல்பட்டினம் பேருந்து சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கு மலபார் காயல் நல மன்ற செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மலபார் காயல் நல மன்ற செயற்குழு அவசரக் கூட்டம் 29.07.2011 அன்று, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - பேருந்து கட்டணம் திடீர் உயர்வுக்கு கண்டனம்:
கோழிக்கோடு- காயல்பட்டினம் வழித்தடத்தில் இயங்கிவரும் பேருந்து சேவைக்கான கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரு டிக்கட்டுக்கு ரூபாய் தொன்னூற்று ஐந்து (ரூ.95) உயர்த்தியுள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது,
மேலும் சாதாரண பேருந்தை விடவும் மோசமான நிலையிலுள்ள இருக்கைகளை கொண்ட இப்பேருந்தில் 550 கிலோ மீட்டர் பயணத்தை மிகவும் சிரமத்துடன் பயணியர் மேற்கொள்கின்றனர்.
ஆதலால், பேருந்து கட்டண உயர்வை நீக்கும்படியும், அல்லது கட்டண உயர்வுக்கு தகுந்தாற்போல நல்ல சொகுசு இருக்கைகளைக் கொண்ட பேருந்தை இந்த வழித்தடத்தில் இயக்க கோரிக்கை வைத்தும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் மூன்று உயர் அதிகாரிகளுக்கும் மனுக்கள் வழங்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - மருத்துவ உதவி:
காயல்பட்டினத்தில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட இருவரின் மனுக்களை விசாரணை செய்த குழுவின் பரிந்துரைப்படி, அவர்களுக்கு ரூபாய் 20000/= (இருபது ஆயிரம்) வழங்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு:
கடந்த 17-07-2011 அன்று நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டபடி, இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி 14-08-2011 அன்று ஸ்டேடியம்-புதியரா சாலையில் அமைந்துள்ள K.M.A. அரங்கில் நடைபெற உள்ளதால் எல்லா காயலர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு (MKWA) சார்பில் அனைவரையும் அன்புடன் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா)
செய்தித் தொடர்பாளர் (MKWA) |