“மானுட லட்சியம்” எனும் தலைப்பில் காயல்பட்டினம் ஹஸ்பி ரப்பீ நண்பர்கள் குழுவின் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் 26.07.2011 அன்று இரவு 07.15 மணிக்கு, காயல்பட்டினம் தீவுத்தெருவில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.செய்யித் இப்றாஹீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எச்.பி.என்.முஹம்மத் நூஹ் அன்வாரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் ஏ.எச்.ஸதக்கத்துல்லாஹ் ஸஊதீ அன்வாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஹாஃபிழ் நோனா ரிழ்வான் அன்வாரீ, “சேவைச் செம்மல்” விருதுபெற்ற காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களை வாழ்த்தும் மடலை வாசித்தார்.
பின்னர், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.சுல்தான் ஃபாழில் பாக்கவீ “இஸ்லாமின் நிழலில் குழந்தைகள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, “திரைகள் விலகட்டும்! இதயங்கள் திறக்கட்டும்!!” எனும் தலைப்பில் காயல் முஹம்மத் யூஸுஃப் அன்வாரீ சிறப்புரையாற்றினார்.
பின்னர், நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியில் பயின்று “ஆலிம் மிஸ்பாஹீ” பட்டம் பெற்ற மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ, வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் பயின்று “ஆலிம் கைரீ” பட்டம் வென்ற மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.
குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சிகளனைத்தையும் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்து வழங்கினார். நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளின் நிறைவில் அனைவருக்கும் தபர்ருக் - நேர்ச்சை வழங்கப்பட்டது.
தகவல்:
ஹஸ்பி ரப்பீ நண்பர்கள் குழு சார்பாக,
ஹாஃபிழ் நோனா ரிழ்வான்,
காயல்பட்டினம். |