31.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று ரமழான் துவக்க நாள் என்றும், 29.08.2011 அன்று ரமழான் 30ஆம் நாள் என்றும், 30.08.2011 செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என்றும், வானவியல் கணக்கை மேற்கோள் காட்டி காயல்பட்டினம் நகர ஹிஜ்ரா குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏர்வாடியில் செயல்பட்டு வரும் அக்குழுவின் தலைமையகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நிகழும் ஹிஜ்ரீ 1432ஆம் ஆண்டின் ரமழான் மாதம் 30 நாட்களைக் கொண்டு பூர்த்தியடைகிறது. எதிர்வரும் ரமழான் மாதத்தின் முதல் நாள் 31.07.2011 ஞாயிற்றுக்கிழமை என்பதையும், இறுதி நாள் 29.08.2011 திங்கட்கிழமை என்பதையும் அறியத் தருகிறோம்.
எனவே, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைப் பெருநாள் 30.08.2011 செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட வேண்டும் என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு அறியத் தருகிறோம்.
ரமழான் ஆரம்பம் (பிறை 01) - 31. 07.2011 - ஞாயிறு
ரமழான் முடிவு (பிறை 30) - 29.08.2011 - திங்கள்
பெருநாள் - ஈதுல் ஃபித்ர் (ஷவ்வால் 01) - 30.08.2011 - செவ்வாய்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 30.08.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 07.00 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறும் என நகர ஹிஜ்ரா குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |