இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டின்போது, ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் கண்காட்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தொன்மை வாய்ந்த ஏராளமான கலைப்பொருட்களில், காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் சார்பிலும் பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பொருட்களை அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி வளாகத்திலேயே பார்வைக்கு வைத்து, கடந்த 14.07.2011 அன்று கண்காட்சி நடத்தப்பட்டது.
அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை ஆண்களுக்கும், மதியம் 02.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை பெண்களுக்கும் கண்காட்சி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை காயல்பட்டினத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி நிறுவனர் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் ரக்கீபாக்கள், ஆசிரியையர் செய்திருந்தனர்.
கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் படக்காட்சியைக் காண இங்கே சொடுக்குக! |