Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:40:49 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6761
#KOTW6761
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 19, 2011
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு இணையதளத்திற்கு 3 நாட்களில் 23 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3972 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பிரத்தியேக www.kayalitlc.org என்ற இணையதளம் அமைக்கப்பட்டிருந்தது.



மாநாடு நடந்த மூன்று நாட்களில் (ஜூலை 8, 9 மற்றும் 10) - 1832 வருகைகளில், 13,416 பக்கங்கள் - இணையதளத்தில் பார்க்கப்பட்டன.



22 நாடுகளின், 63 நகரங்கள்/பகுதிகள் இருந்து பார்வையாளர்கள் இணையதளத்திற்கு வந்துள்ளனர்.

நாடுகள்:

India, Saudi Arabia, Hong Kong, United Arab Emirates, Sri Lanka, Singapore, Qatar, China, Thailand, United Kingdom, United States, Kuwait, Bahrain, Taiwan, Macau, Japan, Oman, Australia, Tanzania, Malaysia, Iran, Seychelles

நகரங்கள்/பகுதிகள்:

Hong Kong, Chennai, Sivakasi, Riyadh, Dubayy, Jiddah, Abu Dhabi, Coimbatore, Colombo, Singapore, Doha, Bangalore, Madurai, Bangkok, Cochin, St Albans, Calcutta, Trivandrum, Guangzhou, Thanjavur, Manama, Kuwait, Arar, Nei-Hu, Mumbai, New Delhi, Pondicherry, Roselle Park, Macau, Jiangmen, Jaipur, Pune, Medina, Masqat, Shenzhen, Wallington, Dhahran, Kobe, Dar Es Salaam, Kuala Lumpur, Hyderabad, San Diego, Surat, Sydney, Gurgaon, Tabuk city, Corona, Mecca, Dongguan, Croydon, Buraidah, Lambeth, Los Angeles, Victoria, Lansing, Al-Jubayl, Shibuya, Jamshedpur, Osaka, Adelaide, Poplar, Kawasaki, Tehran

இணையதள பார்வையாளர்கள் விபரம் Google நிறுவனத்தின் Analytics மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

தகவல்:
www.kayalitlc.org


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by hasan (Khobar) [19 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6181

எம் தாய்நாட்டின் வரைபடம் தவறாக உள்ளது. தயவு செய்து திருத்தவும் அல்லது அந்த படத்தை எடுக்கவும்.

Administrator: Map corrected. Thanks for pointing out


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்!
posted by Muhammed Raheem (Olympic) [21 July 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 6226

உங்கள் யாவரும் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக! இந்த இஸ்லாமிய சூபிச தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று ஒரு நாகூசாமல் சிலர் குறை கூறியவர்களுக்கு ஒரு பாடம்! இளையான்குடி சார்ந்த ஒரு மாற்று மத சகோதரர் புனித இஸ்லாத்தை தழுவினார்.. ஆதாரம் http://www.scribd.com/doc/60430326/Manichudar-July-௨௦


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Najeeb nana (Kayalpatnam) [21 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 6236

இந்த மாநாட்டு மேடையிலேயே ஒரு சகோதரர் இஸ்லாத்தை தலுவினாரே! இதனை அறிவிக்கும்பொழுது கூடியிருந்தவர்கள் 'ALLAH AKBAR ' என்று முழங்கிகினார்களே! இக்கண் கொள்ளா நிஹல்சியை 'ONLINE' மூலம் பார்த்த நானும் தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by சாளை நவாஸ் (sg) [22 July 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6248

அப்படியா நஜீப் நானா, அப்போ நம் ஊரில் தாவா சென்டர்ன்னு ஒன்னு இருக்கே! அங்கே அனுதினமும் பல மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டு இருகிறார்கள் , ஊர் சென்றால் அங்கேயும் போய் அல்லாஹ் அக்பர் சொல்லி கொண்டு வாருங்கள்.

இந்த மாதிரி விஷயத்தை நாம எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்? மாற்றுமத அரசியல்வாதிகளும் நடிகர்களுக்கு தொப்பி போட்டு அழகு பார்க்கும் நாம் அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சி தூய மார்கத்தில் சரணடைந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களை நாம் மறந்து விடுகிறோம். அதற்கு கடுமையான முயற்சி எடுத்து வரும் தாவா சென்டர் எங்கே இருக்கிறது என்று கூட நம்மில் பலபேருக்கு தெரியாது.

எங்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது சார், அவர்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? எங்களுக்கு எங்கள் குடும்பத்துக்கு உழைத்து போடவே நேரம் சரியா இருக்குது.

எதுவரை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Yunus (Admiralty) [22 July 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 6267

சாலை நவாஸ்... தாவா சென்டரில் மட்டும் அல்ல, அனேக இடங்களில் நல்லவைகள் நடக்கின்றன. இங்கு யாரும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடை குறை கூறியது போல் தாவா சென்டரை பற்றி குறை கூறவில்லை.. உலகில் பல்வேறு இடங்களில் நல்ல நிகழ்சிகள் நடக்கின்றன!

நீங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடை குறை கூறினீர்களே, அங்கு மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தில் வந்துள்ளார்களே என்றுதான் கூறுகிறோம். தாவா சென்டரில் நடந்ததை புகழ்ந்து பேசும் நீங்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நடந்ததை மட்டும் ஏன் உங்கள் மனம் ஏற்க மறுக்கின்றது. அங்கு அல்லாஹு அக்பர் என்று சொன்னால் இங்கும் சொல்லுங்களேன்.. தாவா சென்டரில் நடந்தால் அது சரி.. அதே விஷயம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நடந்தால் தப்பு.. உங்களை போன்றோர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வீர்களோ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by சாளை நவாஸ் (sg) [22 July 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 6271

யூனுஸ், ஒரு கருத்துக்கு பதில் எழுதும் பொது இரண்டு முறையாவது படித்து பார்த்து விட்டு எழுதுங்கள். ஒரு சகோதரர் இஸ்லாத்திற்கு வருவது எவ்வளவு சந்தோசமான நிகழ்வு, அதை யாரும் குறை சொல்ல முடியாது. அது மேடையில் நடத்தால் என்ன அல்லது ஓடையில் நடந்தால் என்ன!

நான் சொல்ல வந்தது அதே போலே நம் ஊரிலும் அதே நிகழ்வு நடந்து நடந்து கொண்டிருக்கிறதே, அங்கேயும் பொய் பார்த்து அல்லாஹ் அக்பர் என்று சொல்லி விட்டு வாருங்கள் என்று தானே சொல்லி இருந்தேன், இதில் எங்கே பொய் தப்பை கண்டு பிடித்தீர்கள்?

இங்கே கல்வி பயின்ற சதோதரர்கள், அவரவர் ஊருக்கு போய் அங்கும் தாவா செய்து பல நண்பர்களை இங்கே கூடி வந்து இஸ்லாத்தில் இணைய செய்கின்றனர். நாமும் எத்தனை மாற்று மத சகோதர்களோடு பழகி இருப்போம், ஒரு நாலாவது அவர்களுக்கு தாவத் பணியை எடுத்துரைத்து இருப்போமா?

இன்று நம் சமுதாய மக்கள் டிவி சீரியல்களிலும், திரை படங்களிலும், செல்போன்களிலும் இண்டர்நெட்களிலும் மனதை பறிகொடுத்து கொண்டு இருக்கும் வேலையில் ஊரில் ஒரு மூலையில் இஸ்லாத்தின் ஒளி ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது, தாவா சென்டரின் மூலமாக என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்து விட போகிறது?

அப்படிபட்ட தாவா சென்டரின் நிலை, ஒரு கட்டிடம் இல்லாமலும், சில சமயம் இல்லை பல சமயம் மற்ற செலவுகளுக்கே திண்டாடகூடிய சூழ்நிலை, எதோ சில நன்மக்கள் உதவியால் தொய்வில்லாமல் தாவத் பனி சென்று கொண்டிருக்கின்றது. நீங்களும் உதவி செய்ய விரும்பினால், புஹாரி காக்கா ( 48 ) அவர்களை அணுகவும்.

இதை சொல்லதான் தாவா சென்டரும் போய் பாருங்கள் என்று எழுதினேன், சகோதரர் தவறாக புரிந்து கொண்டார் போலும். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவே இருக்கின்றான். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Najeeb nana (Kayalpatnam) [23 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 6281

நவாஸ், உங்கள் பதிவு சரியாக இருக்கலாம் ஆனால் இந்த செய்திக்கான இடத்தில் பதித்தது தான் சற்று confuse பன்னுகிறது. இந்த நிகழ்ச்சியை மூலம் இஸ்லாத்திற்கு என்ன லாபம் என்ற வினாவிற்கு பதிலாக(Answer) எனது கருத்தை எடுத்து கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by K.M.T Shaikna Lebbai (Singapore) [23 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6284

இந்த நிகழ்ச்சி மூலம் நமது ஊருக்கு என்ன லாபம்? சற்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

இந்த நிகழ்சிக்காக செய்த செலவுகளை ஊரில் உள்ள எத்துனையோ கஷட்டப்பட்ட மக்களுக்கு கொடுத்திருக்கலாம். முழுவதுமாக தாவா பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தாவா சென்டரின் பணிகளுக்காக கொடுத்திருக்கலாம்.

இன்றைக்கு நமது ஊரில் உள்ள கஷட்டப்பட்ட மக்கள் தங்களுடைய தேவைக்காக வெளிநாட்டில் உள்ள காயல் இயக்கங்களைத்தான் நாட வேண்டிருகிறது.
ஊரில் உள்ள வசதி படைத்தவர்கள், இந்த மாதிரியான நிகழ்ச்சிக்களுக்காக செலவு செய்றத விட்டுட்டு, ஊரில் உள்ள கஷட்டப்பட்ட மக்களுக்கு உதவி இருந்தால் அவர்கள் (கஷட்டப்பட்ட மக்கள்) ஏன் வெளிநாட்டில் உள்ள காயல் இயக்கங்களை நாட வேண்டி உள்ளது?

இன்றைக்கு ஊரில் எத்தன மக்கள் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று, ஊரில் உள்ள வசதி படைத்தவர்களை விட வெளிநாட்டில் உள்ள கயலர்களுக்குதான் அதிகம் தெரியும்.

என்னத்த சொல்லுறது போங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தெரிந்தும் தெரியாதைப்போல்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [23 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6287

அன்புச் சகோதரர் KMT சேக்னா லெப்பை அவர்களுக்கு!

அஸ்ஸலாமுஅலைக்கும்!

அது எப்படி அன்று பிறந்த பாலகனைப் போல கேள்வி கேட்க உங்களால் முடிகிறது?

ஜூலை எட்டாம் தேதி ,செய்தி எண் : 6672 .இந்த செய்தியின் கருத்துப்பதிவில் இதே கேள்வி,இதே முறையில் எழுப்பப் பட்டு, 31 கருத்து பதிவாகி இருப்பதும்,அது 1780 முறை பார்க்கப்பட்டிருப்பதும் தங்களுக்குத் தெரியாதா? நீண்ட விவாதம் நடந்து முடிந்து இரண்டு வாரங்கள்தானே ஆகிறது. அதை ஒருமுறை படித்து பார்த்து விட்டு ,ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி சகோதரரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Moosa Sahib AM (Abu Dhabi) [23 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6289

தாவா சென்டர் நல்லொதொரு பணியை செய்து கொண்டிருக்கறது.

இந்த மாநாடு நடத்தியதில் என்ன பிரயோஜனம் இருந்தது என்பதை விளக்கினால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

எனது தாழ்மையான கருத்து, மற்றவர்கழும் தாவா பணியை செய்ய முன் வர வேண்டும். அல்லது தாவா பனி செய்வோரை ஊக்க படுத்த வேண்டும், குறை கூற கூடாது யாரையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Babu (Kayalpatnam) [23 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6292

அஸ்ஸலாமு அழைக்கும்

இது தான் நம் கலாச்சாரம் முடிந்த பின்பு விவாதிப்பது , இப்படியே இருந்தால் அனைவருக்கும் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Yunus (Admiralty) [23 July 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 6296

சாளை நவாஸ் மற்றும் அவருடைய கருத்தை ஆதரிக்கும் மற்றவர்களுக்கும்... தாவா செனட்டர் பண்ணுகின்ற வேலை பற்றி யாரும் குறை கூறினார்கள் என்றால் தான் அதை பற்றி விவாதம் பண்ண வேண்டும்.. இப்ப நீங்க பதில் எழுது போது ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து விட்டு எழுதுங்கள்..

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவியது உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையா? அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.. அதற்கு மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி இல்லை என்ற பதில் வேண்டும்..

தாவ செண்டர் பற்றி இங்கு விஷயம் இல்லை.. நான் சுன்னத் ஜமாதோ, தப்லீகோ, முஸ்லிம் லீகோ, JAQH அல்லது அதில் இருந்து பிரிந்த, அபூ அப்துல்லாஹ் அணியோ, பீ ஜே அணியோ, அல்லது அதில் இருந்து பிரிந்த தமூமூக வோ, பாகிர் அணியோ, ஜமாத்தே இஸ்லாமியோ, அல்லது அதில் பிரிந்த அஹ்லே குரானோ, அஹ்லே ஹதீசோ கிடையாது..

தாவா செனட்டர் செய்யும் இந்த பணியை அதற்கு முன்பாகவே.. காலம் சென்ற ஐதுரூஸ் ஆலிம் புதிதாக இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இலவச உணவு, உடை, இடம் கொடுத்து இஸ்லாத்தையும் போதித்தார் (யாகூதுள் அர்ஷ்), மேலும் இன்று வரை மஹ்லாராவிலும் இது போல் நடை பெற்று கொண்டு தான் இருகின்றது. அங்கெல்லாம் போய் நீங்களும் விசாரித்து உங்களின் தாராள நிதி உதவி பண்ணுங்கள்.. விருப்பம் இருந்தால்..

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்ததால் நம்ம ஊருக்கு என்ன பயன் என்று இன்னொருவர்.. மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்திற்கு வந்தது.. இது நமக்கு சந்தோசம் இல்லையா.. தாவ சென்றருக்கு உதவுங்கள்.. வேண்டாம் என்று நாங்க சொல்ல வில்லையே.. அங்கு மட்டும் தான் இஸ்லாத்தின் ஒளி இருகின்றது என்று சொல்லுவது அபத்தமாக உள்ளது..

நவாஸ், மற்றும் singapore ஷைக்ன, நீங்கள் வாரி வழங்கும் வல்லகள் தான். என்றாலும் நீங்கள் வெளிநாட்டில் பிக்னிக் போகும் போதும், Buffet சாப்பிடும் முன் சற்று நிதானித்து விட்டு.. நம் ஊரில் ஒரு வேலை சாப்பிட உணவு இல்லாமல் ஏத்தனையோ பேர் இருக்க எனக்கு இது தேவையா என்று நினைத்து விட்டு சாபிடாமல் அந்த பணத்தை ஊரில் உள்ள ஏழைகளுக்கு அனுப்புங்கள்.. உங்கள் கருத்துப்படி நீங்கள் இஸ்ராபில் இருந்து தப்பி விட்டீர்கள்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு மீண்டும் மீண்டும் நாங்கள் தான் காசு அனுப்புகின்றோம் என்று மார் தட்ட வேண்டாம்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by sayedali (ABUDHABHI) [23 July 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6299

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒருவர் மேடையில் இஸ்லாத்தை தழுவியது.அல்ஹம்து லில்லாஹ்.ஆனால் ஓன்று அவர் இலக்கியங்களில் மயங்கி இஸ்லாத்திற்கு வந்தாரா?அல்லது ஏற்க்கனவே தாவா சென்டர்களிலும் சில தாயி நண்பர்களுடைய தொடர்பிலும் குரான் ஹதீஸ்கலில் ஈர்க்கப்பட்டு வந்தாரா?பின்னதே நன்மை.அப்படியே இருக்க வேண்டும் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. உண்மை கசக்கிறது!
posted by kavimagan (dubai) [23 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6309

ஒருநண்பர் பட்டிமன்றத்தில் கேட்பதுபோல இலக்கியத்தில் மயங்கினாரா? அல்லது குர்ஆன், ஹதீஸ் மூலம் இஸ்லாத்தை ஏற்றாரா என்று கேட்டிருப்பது வினோதத்திலும் வினோதம்.

குர்ஆன் இறைவனின் வார்த்தைகள். ஹதீஸ் நபிகளாரின் சொல்லும், செயலும். இவை இரண்டையும் ஆய்வு செய்து, கட்டுரையாக, கவிதையாக, சட்ட நூற்களாக இன்னும் மொழியின் பல்வேறு வடிவங்களில் வெகுஜன மக்களிடம் எடுத்துச் சென்று, சிறைபட்டுக்கிடந்த அவர்களது இதயம் விடுதலைபெற உதவும் திறவுகோல் மொழி மற்றும் மொழி சார்ந்த இலக்கியங்கள்.

ஒரு விஷயத்தை பேசிக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு விஷயத்தைக் கொண்டுவந்து மூலவிஷயத்தை மறக்கடிக்கும் கேடுகெட்ட யுக்தி கைவிடப்பட வேண்டும். தங்களை குர்ஆன் ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் பெரியவர்கள் இருபது ஆண்டுகாலம் கூடிக்குலவி கும்மி அடித்துவிட்டு, இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் காட்சியை பார்க்கிறோமே? என்ன பிரச்சனை? கொள்கை மோதலா? தாவா பணியை செய்வதில் கருத்து வேறுபாடா? இல்லையே! அன்னியப்பென்னுடன் தொடர்பு, பணமோசடி, சொத்தை கைப்பாற்றி விட்டான், இவன் திருடன், அவன் திருடன் என்று பத்து பதினைந்து இணையதளங்கள் நாறிக்கொண்டு இருக்கிறதே! போய் அவர்களுக்கு புத்திமதி சொல்கிற வழியைப் பாருங்கள். மூலவிஷயத்திலிருந்து, வேறுவிஷயத்திற்கு திருப்பிவிடுவது என்பது இதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by mohammed ikram (saudi arabia) [23 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6316

இப்படி நாம் ஒருவருக்கு ஒருவர் பல கருத்துகளை சொல்லி சண்டை பிடித்து கொண்டால். உண்மையில் இஸ்லாம்மின் பக்கம் வர நாடும் பிற சமுதாய நண்பர்கள், நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று நினைத்து இஸ்லாமின் பக்கம் வராமல் ஓடி விட போகிறார்கள். தயவு செய்து இத்துடன் உங்களது சண்டையினை நிறுத்தி கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத...
posted by Salai Sheikh Saleem (Dubai) [23 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6317

அடா அடா அடா...என்ன சோதனையப்பா இது? கண்ணுங்களா ஒரு கருத்தை சொல்லும்போது அது எந்த அளவிற்கு சொல்லப்பட்ட விஷயங்களோடு ஒத்து போகின்றது என்று தயவு செய்து சீர்தூக்கி பாருங்கள்.

தாவா எனபது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தாரோ அல்லது சிலராலோ செய்யப்பட வேண்டியது மட்டும் அல்ல, ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் அதும் கடைமையக்கப்பட்டிருக்கிறது. அது எங்கு யாரால் நடத்தப்படுகிறது என்று ஆராயாமல் எங்கு நடந்தாலும் அதை ஒவ்வொரு முமீனகளும் பெருமைகொள்ளக்கூடிய ஒரு நல்ல விஷயம்தானே. இதற்க்கு வுதவுங்கள் என்று கேட்பது வேறு அதை விட்டு விட்டு தயவு செய்து நம் பொன்னான நேரங்களை முடிவுராக்கனமான கொள்கை கோட்பாடு என்று திசை திருப்ப வேண்டாமே.

எவ்வளவோ விவாதித்து விவாதித்து, முடிவே காணாத ஒரு விவாதத்தை தவிர்ப்பதுதானே நல்லது. நாம் முஸ்லிம்களாக நம் நம் தகுதிக்கு யார் யாருக்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தாலே நம் சமூகத்தில் நன்மை பயக்கும்.

மாநாடு நடத்துவோர் நடத்தட்டுமே அதிலிருந்தும் நம் மார்க்கத்திற்கு பயன் கிடைத்தால் (கண்டிப்பாக கிடைத்திருக்கும்) அது நமக்கு நல்லதுதானே. தவா செய்பவர்கள் செய்யட்டும். இரண்டிற்கும் நாம்தான் உதவி செய்ய வேண்டும். இது நாம் நமக்காகவே செய்யும் ஒரு உதவிதானே. இதில் என்ன தயக்கம்.

ஊருக்கும் ஊரில் இருப்போர் உடல் ஆரோக்கியத்திற்கும் மாணவர்கள் சமுதாயத்தை கை தூக்கி விடவும் பெரிய பெருப்புகள் நமக்கு இருக்கின்றன. வாருங்கள் எல்லோரும் ஒரே அணியில் (எந்த அணி என்று கேட்டு இன்னுமொரு விவாதத்திற்கு போக வேண்டாம்). நம் ஊரையும் சமுதாயத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பேணி காப்பற்றுவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved