பி.எஸ்.என்.எல்., சார்பில் அதிகளவில் அமைக்கப்பட்டிருக்கும் டவர்களால் மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.
பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 120 பி.எஸ்.என்.எல்., டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது மற்ற நெட்வொர்க் டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகளவு இருந்தாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு.சர்வதேச அளவில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்படும். இதை "ஐ.டி.யூ.சி.,' சார்பில் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும்.
குறைந்தது 20 வாட்ஸ் முதல் அதிகபட்சம் 40 வாட்ஸ் வரைதான் பயன்படுத்தபட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், இந்த அளவிலான வாட்ஸ் பயன்படுத்தும்போது குறைந்த தொலைவில் தான் "சிக்னல்' கிடைக்கிறது. "சிக்னல்' அதிகளவில் கிடைப்பதற்காக மொபைல்போன் டவர்கள் அதிகளவில் அமைக்க வேண்டும். இல்லையேல் "ஐ.டி.யூ.சி.,' சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாட்ஸை காட்டிலும் அதிகளவிலான வாட்ஸ் அமைக்கப்பட வேண்டும். ஆனால், 40 வாட்ஸ் காட்டிலும் அதிகளவிலான வாட்ஸ் பயன்படுத்தினால், மனிதர்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.அதனால், பி.எஸ்.என்.எல்., சார்பில் வாட்ஸை உயர்த்தாமல், அதிகளவில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவாக உள்ளது என்றனர்.
நன்றி:
தினமலர் (17.07.2011) |