சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 42ஆவது பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் இணைந்தனுப்பியுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
எமதன்பின் ரியாத்வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 42ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 12.08.2011 வெள்ளிக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு, ரியாத் ஃபத்ஹா ஹால்ஃப் மூன் ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. அவ்வமயம் ரமழான் காலமாக இருப்பதால், சிறப்பான ஏற்பாடுகளுடன் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் இணைந்து நடத்தப்படவுள்ளது.
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |