இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது. இறுதிநாள் நிறைவு விழாவின்போது 34 பேருக்கு ‘சேவைச் செம்மல்‘, ‘தமிழ் மாமணி‘ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
நிறைவு விழா:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மூன்றாம் நாளான 10.07.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில், அல்லாமா ஹபீப் முஹம்மத் லெப்பை ஆலிம் அரங்கத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஹாஜி எஸ்.ஐ.அப்துல் காதிர், ஹாஜி பி.எம்.ரஃபீக், ஹாஜி மு.த.ஜெய்னுத்தீன், டாக்டர் முஹம்மத் தம்பி, ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், ஹாஜி ஓ.எல்.எம்.ஆரிஃப், பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“முத்துச்சுடர்” ஹாஃபிழ் என்.டி.சதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி விழா நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.
சமுதாயப் பாடகர் ஹாஜி தேரிழந்தூர் தாஜுத்தீன், கலைமாமணி இ.குல்முஹம்மத், காயல் எஸ்.ஏ.காஜா ஆகியோர் இஸ்லாமிய பாடல்கள் பாடினர்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட கீழக்கரை ஹாஜி சீனாதானா செய்யித் அப்துல் காதிர், நாகூர் ஹாஜி ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தீர்மானங்கள்:
பின்னர், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வாசிக்க, தக்பீர் முழக்கத்துடன் விழாவில் கலந்துகொண்டோர் அவற்றை ஒருமனதாக வழிமொழிந்தனர். (தீர்மானங்கள் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
கட்டுரைப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள்:
அடுத்து, மாநாட்டையொட்டி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்பரிசுகளை ஹாஜி எஸ்.அக்பர்ஷா வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டைப் பாராட்டி திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது:
பின்னர், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெற்றது:-
சென்னை பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழக நிறுவனர் கீழக்கரை ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மானுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டுக் குறிப்புரையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் வாசித்தார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா ஆகியோர் இணைந்து விருதை வழங்க, ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் சார்பாக, இ.டி.ஏ. அஸ்கான் குழும நிறுவனத்தின் பொது மேலாளர் ஹாஜி ஏ.ஜி.ஏ.அஹ்மத் ரிஃபாய், சென்னை புகாரீ ஆலிம் அரபிக்கல்லூரியின் முதல்வர் இணைந்து அவ்விருதைப் பெற்றுக்கொண்டனர். பின்னர், ஹாஜி ஏ.ஜி.ஏ.அஹ்மத் ரிஃபாய் ஏற்புரை வழங்கினார்.
‘சேவைச் செம்மல்‘ விருது:
அதனைத் தொடர்ந்து,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான்,
பன்னூலாசிரியர் மானா மக்கீன்,
டத்தோ ஹாஜி பரக்கத் அலீ,
சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா,
தகைமிகு எம்.இலியாஸ்,
டத்தோ ஹாஜி முஹம்மத் இக்பால்,
ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ,
ஹாஜி எஸ்.அப்துல் காஸிம்,
ஹாஜி பி.மஹ்மூத்,
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,
கவிஞர் சீர்காழி இறையன்பனார்,
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி,
வழக்கறிஞர் வயி. நாராயணசாமி,
‘நவமணி‘ என்.எம்.அமீன்,
காயல்பட்டினம் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ
ஆகிய 16 பேருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருதுகள் வழங்கப்பட்டன.
‘தமிழ் மாமணி‘ விருது:
அதனைத் தொடர்ந்து,
முனைவர் பா.வளன் அரசு,
கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாபுத்தீன் ,
கவிஞர் காயல் எஸ்.ஏ.நெய்னா,
முனைவர் திருமலர் மீரான் பிள்ளை,
கவிஞர் ஏ.இக்பால்,
நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்,
பேராசிரியர் திருவை அப்துர்ரஹ்மான்,
நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம்,
உணர்வுப் பாவலர் உசேன்,
புலவர் ப.மு.அன்வர்,
முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப்,
எழுத்தாளர் சிராஜுல் ஹஸன்,
கவிஞர் அபூஅஸ்மத்,
கவிஞர் எஸ்.செய்யித் அஹ்மத்,
முனைவர் பர்வீன் சுல்தானா
ஆகிய 15 பேருக்கு ‘தமிழ் மாமணி‘ விருதுகள் வழங்கப்பட்டன.
இதர விருதுகள்:
அதனைத் தொடர்ந்து, கவியோகி நாச்சிகுளத்தார் முகம்மது யூசுஃபுக்கு சேதுகவி சவ்வாது புலவர் விருதும், இசையருவி குமரி அபூபக்கருக்கு வள்ளல் ஜமால் முஹம்மத் விருதும் வழங்கப்பட்டது.
இவ்விருதுகள் அனைத்தையும், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார். இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் அவற்றுக்கான பாராட்டுக் குறிப்புரையை வாசித்தார்.
பின்னர், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை பிறை எஃப்.எம். நிகழ்ச்சி தயாரிப்பாளர் யூனுஸ் கே.ரஹ்மான் தயாரிப்பிலான இஸ்லாமிய நிகழ்ச்சி குறுந்தகடு மற்றும் நூற்கள் வெளியிடப்பட்டன.
அவரைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா.முஹம்மத் ஃபாரூக் வாழ்த்துரை வழங்கினார்.
நடுவண் அமைச்சர் இ.அஹ்மத் வாழ்த்து:
பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நடுவண் வெளியுறவுத் துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வாசித்தார்.
அவரது வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-
அன்புள்ள ஜனாப் அபூபக்கர் ஸாஹிப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சரித்திரப் புகழ்வாய்ந்த காயல்பட்டினத்தில் இம்மாதம் 08ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடத்தப்படும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்காக என்னையும் அழைத்தமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம்கள் இந்த தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக போற்றத்தக்க வகையில் ஆற்றியுள்ள அரும்பணிகள் அடங்கிய அரிய சரித்திரக் குறிப்புகளை உங்களிடமிருந்து காதாறக் கேட்பதற்காகவும், அதுகுறித்து நானறிந்து வைத்துள்ள சில பயனுள்ள தகவல்களை உங்களுடன் பரிமாறிக்கொள்ளும் பொருட்டும் இம்மாநாட்டில் உங்களோடு நானும் ஒருவனாகக் கலந்துகொள்ள பெரிதும் ஆவலுடன் காத்திருந்தேன் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
இஸ்லாம் இந்த இந்திய துணைக்கண்டத்தின் கடல்வழியே வந்தடைந்தபோது, அதன் ஊடக கேந்திரமாகத் திகழ்ந்தவை உருது, பெங்காளி, மலையாளம், மிகக் குறிப்பாக தமிழ் மொழி... இம்மொழிகள்தான் இஸ்லாமிய நல்லொழுக்கச் சிந்தனைகளை இம்மண்ணில் மக்களிடம் சென்று சேரக் காரணிகளாக அமைந்தவை.
இந்தத் தமிழ் மொழிக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மையான நீண்ட நெடிய பாரம்பரியமுண்டு என்பதில் இருவேறு கருத்தில்லை. அதற்கு நடமாடும் சாட்சியாக உள்ளவைதான் சங்க கால இலக்கியக் கருவூலங்கள்.
இன்று காயல்பட்டினம் வருவதற்காக நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால், எனது அமைச்சின் அவசர அலுவல் காரணமாக தலைநகர் டில்லிக்கு என் பயணத்தை மாற்ற வேண்டியதாயிற்று. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமைச்சர் பொறுப்பிலிருக்கும் எனக்கு – முன்னறிவிப்புகள் கூட இல்லாமல் திடீர் திடீரென இதுபோன்ற பயண நிலைகள் – குறிப்பாக நான் டில்லியில் அதிகம் தங்க வேண்டிய நிலை ஏற்படுவது சகஜம் என்பதை நீங்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என்ற நல்லெண்ணத்துடன்,
என்னால் இன்று உங்கள் யாவருடனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இனிய விழாவில் பங்கேற்கவியலாமல் போனாலும், இம்மாநாடு முழு வெற்றி பெறவும், அதன் நோக்கம் செம்மையடையவும் வாழ்த்துவதோடு, இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்களையும், பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் நான் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன், நன்றி.
இவ்வாறு நடுவண் அமைச்சர் இ.அஹ்மத் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நிறைவுப் பேருரை:
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றினார்.
நிறைவாக, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு துணைத்தலைவர் ஏ.கே.பீர் முஹம்மத் நன்றி கூற, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளனைத்தையும் காயல் மகபூப், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
நிறைவு விழாவில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும், உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டு ஏற்பாடுகள்:
மூன்று நாள் மாநாட்டு ஏற்பாடுகளையும், அதை நடத்திய இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வழிகாட்டுதலில், ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல் மகபூப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாநாட்டின் ஆலோசனைக் குழு, ஏற்பாட்டுக் குழு, வரவேற்புக் குழு, விழாக்குழு, மலர் வெளியீட்டுக் குழு, கண்காட்சிக் குழு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை குழு, விருந்தோம்பல் குழு, தன்னார்வப் பணிக்குழு, மகளிர் அரங்க ஏற்பாட்டுக்குழு உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நிறைவு விழா முடிந்து, மறுநாள் 11.07.2011 அன்று, மாநாட்டு விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனுசரணையில் அக்குழுவினர் குற்றாலம் சிற்றுலா சென்று வந்தனர்.
|