இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
பாடல் அரங்கம்:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று இரவு 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில், சங்கநாதச் செம்மல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அரங்கத்தில், இஸ்லாமிய பாடல் அரங்கம் நடைபெற்றது.
மாநாட்டு தன்னார்வப் பணிக்குழு தலைவர் ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் தலைமை தாங்கினார். எஸ்.எச்.மீராஸாஹிப், எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், என்.டி.ஷெய்கு சுலைமான், எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம், எஸ்.ஏ.ஜெய்னுல் ஆப்தீன், என்.டி.ஷெய்கு மொகுதூம், என்.எம்.அஹ்மத் ஆகியோர் அரங்கை ஒருங்கிணைத்தனர்.
ஹாஜி முகவை சீனி முகம்மது குழுவினர் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களைப் பாடினர். இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளனைத்தையும் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஒருங்கிணைத்தார்.
|