2008ஆம் ஆண்டு முதல் - வெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு காயல்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் / மக்காவ் வாழ் காயலர் தைக்கா உபைதுல்லாவின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தொடர்ந்து நான்காம் ஆண்டாக இவ்வருடம் - ஜூலை 26, ஜூலை 27 ஆகிய இரு தேதிகளில் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் - காயல்பட்டணம்.காம் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இங்கு அழுத்தவும்.
நகரில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
போட்டிகளின் விதிமுறைகள் வருமாறு:-
போட்டிகள் 1 - 9 வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் காயலர்களுக்கு மட்டுமே:-
(1) Coloring போட்டிக்கான தாள் - Outline உடன் - அரங்கில் வழங்கப்படும். போட்டிக்கான நேரம் 60 நிமிடங்கள். வண்ணம் தீட்டுவதற்கான உபகரணங்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும். தகுதி: LKG - இரண்டாம் வகுப்பு
(2) Drawing போட்டிக்கான Chart Paper அரங்கில் வழங்கப்படும். இப்போட்டியில் மாணவர்கள் இயற்க்கை கருவில் (Theme: Nature) வரையவேண்டும். போட்டிக்கான நேரம் 60 நிமிடங்கள். வண்ணம் தீட்டுவதற்கான உபகரணங்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும். தகுதி: மூன்றாம் வகுப்பு - ஐந்தாம் வகுப்பு
(3) Story Telling போட்டிக்கான நேரம் 3 நிமிடங்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கதையினை கூறலாம். தகுதி: LKG - இரண்டாம் வகுப்பு
(4) பேச்சுப்போட்டிக்கான நேரம் 3 நிமிடங்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் - தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசலாம். தகுதி: மூன்றாம் வகுப்பு - ஐந்தாம் வகுப்பு
(5) Creative Writing போட்டிக்கான நேரம் 60 நிமிடங்கள். மாணவர்களுக்கு வழங்கும் புகைப்படத்தில் உள்ள காட்சி, எழுதும் கதையில் ஒரு அங்கமாக வர வேண்டும் தகுதி: ஆறாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு
(6) பேச்சுப்போட்டிக்கான நேரம் 4 நிமிடங்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பும் விரும்பும் தலைப்பில் - தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசலாம். தகுதி: ஆறாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு
(7) Creative Writing போட்டிக்கான நேரம் 60 நிமிடங்கள். மாணவர்களுக்கு வழங்கும் புகைப்படத்தில் உள்ள காட்சி, எழுதும் கதையில் ஒரு அங்கமாக வர வேண்டும் தகுதி: ஒன்பதாம் வகுப்பு - பன்னிரண்டாம் வகுப்பு
(8) பேச்சுப்போட்டிக்கான நேரம் 5 நிமிடங்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் - தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசலாம். தகுதி: ஒன்பதாம் வகுப்பு - பன்னிரண்டாம் வகுப்பு
(9) வினாடி வினா போட்டி. அணிக்கு இரண்டு பேர். தகுதி: ஆறாம் வகுப்பு - பன்னிரண்டாம் வகுப்பு
போட்டிகள் 10 - 13 வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மாணவர்களுடன் உடன் உள்ளூர் மாணவர்களும் பங்கேற்கலாம் :-
(10) அல்அஸ்மாஉல் ஹுஸ்னா - அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 25ஆவது திருநாமம் வரை - ஆங்கில அல்லது தமிழ் அர்த்தத்துடன். தகுதி: LKG - இரண்டாம் வகுப்பு
(11) திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி (சூரா அல்லுஹா முதல் சூரா அந்நாஸ் வரை) தகுதி: மூன்றாம் வகுப்பு - ஐந்தாம் வகுப்பு
(12) என்னை கவர்ந்த ஏந்தல் நபிகளார் -ஒரு வரலாற்று சம்பவ குறிப்புடன் (The Prophet who touched my heart – explained with an example from Seerah) என்ற தலைப்பில் கட்டுரை 1000 சொற்களுக்கு மிகாமல் தகுதி: ஆறாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு
(13) அம்மா ஜூஸ்உ மனனம் தகுதி: ஒன்பதாம் வகுப்பு - பன்னிரண்டாம் வகுப்பு
செய்தி திருத்தப்பட்டது |