இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
பட்டிமன்றம்:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திலுள்ள மாநாட்டுப் பந்தலில், அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துர்ரஹீம் அரங்கத்தில், “இன்றைய சூழலில் இஸ்லாமியரின் நிலை வாழ்த்தும்படியா? வருந்தும்படியா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா, ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி வாவு எம்.எம்.மஸ்னவீ, எம்.எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், வி.டி.என்.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதினார். அதனைத் தொடர்ந்து, முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தினர் தஃப்ஸ் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர், பட்டிமன்றத்தில் வாதாட வந்திருந்த அனைவரையும், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் துவங்கிய பட்டிமன்றத்தை, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் தி.மு.அப்துல் காதிர் தலைமையேற்று வழிநடத்தினார்.
“வாழ்த்தும்படியே” என்ற அணிக்காக, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ், மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கா.சாகுல் ஹமீத், கவிஞர் ராஜா முஹம்மத் என்ற தமிழ் வென்றி ஆகியோர் வாதாடினர்.
“வருந்தும்படியே” என்ற அணிக்காக, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் பேராசிரியர் அப்துஸ்ஸமத், இளையாங்குடி ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் அப்துர்ரஹீம், சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் லிவிங்ஸ்டன் ஆகியோர் வாதாடினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளனைத்தையும் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார். |