காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த கே.எம்.ஷேக் தாவூத் - ஒய்.எம்.ஆஸியா மர்யம் ஆகியோரின் மகனும், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவருமான எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில், 1200க்கு 1159 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தார்.
பொறியியல் பயில BCM தரவரிசை பட்டியலில் 33 ஆம் இடம் பெற்றிருந்த இவருக்கு, ஜூலை 9 அன்று நடந்த கலந்தாய்வில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள College of Engineering (CEG) இல் Electronics and Communications Engineering (ECE) படிப்பு பயில இடம் கிடைத்துள்ளது.
தகவல்:
கே.எம். சபீர் அலி,
கொச்சியார் தெரு.
|