சென்னை, ஜூலை 14: அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலத் துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமூக நலத் துறை இயக்ககம் சார்பில் ஐந்து திட்டத்தின் கீழ் திருமண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களின் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அதில், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என தனது உத்தரவில் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நன்றி:
தினமணி (15.07.2011) |