காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த முஹம்மது சுல்தான் - சித்தி ஜரீனா ஆகியோரின் மகளும், ஹாஜி கலாமி அவர்களின் பேத்தியும், சென்னை செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் மாணவியுமான எம்.எஸ். கதீஜா நாசிகா, மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில், 1200க்கு 1159 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
பாடவாரியாக அவர் பெற்றிருந்த மதிப்பெண்கள்:
மொழிப்பாடம் - 184
ஆங்கிலம் - 184
கணிதம் - 200
இயற்பியல் - 198
வேதியல் - 194
உயிரியல் - 199
மருத்துவம் பயில BCM தரவரிசை பட்டியலில் 50ஆம் இடம் (General Rank - 1386) பெற்றிருந்த இவருக்கு, ஜூலை 4 அன்று நடந்த கலந்தாய்வில், கன்னியாக்குமரி மருத்துவக்கல்லூரியில் MBBS பயில இடம் கிடைத்துள்ளது. இவர் பெற்றிருந்த கட் ஆப் மதிப்பெண் - 197.5
தகவல்:
எம்.எம். செய்யத் இப்ராகிம் மற்றும் ஏ.ஆர். அபூபக்கர் ஜலாலுதீன்,
சென்னை. |