இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
ஆய்வரங்கம்:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திலுள்ள மாநாட்டுப் பந்தலில், புலவர் நாயகம் ஷேக்குனா புலவர் அரங்கத்தில் ஆய்வரங்கம் துவங்கியது.
முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி, ஓ.ஏ.நஸீர் அஹ்மத், எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் முத்து ஹாஜி, ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், என்.ஷாஜஹான், பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், ஹாஜி எஸ்.எஸ்.சதக்கத்துல்லாஹ், ஹாஜி எல்.எம்.இ.கைலானீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத், தலைமையுரையைத் தொடர்ந்து ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆய்வரங்கைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்கங்களில், ஏராளமான தலைப்புகளில் சரித்திர ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளனைத்தையும் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார். |