இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
மகளிர் அரங்கம்:
மாநாட்டின் மூன்றாம் நாளான 10.07.2011 அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், சுல்தான் ஜமாலுத்தீன் நுழைவாயில் - அறிஞர் முஹம்மத் கல்ஜி அரங்கத்தில், “முன்னேற்றப் பாதையில் முஸ்லிம் பெண்கள்” எனும் தலைப்பில் மகளிர் அரங்கம் நடைபெற்றது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் மகளிர் அணி தலைவர் பேராசிரியர் நஸீமா பானு அரங்கிற்குத் தலைமை தாங்கினார். ஹாஜ்ஜா ஞானி எம்.ஐ.வஜீஹா பேகம், ஹாஜ்ஜா கே.எம்.இ.நாச்சி தம்பி, ஹாஜ்ஜா யூ.செய்யித் மர்யம், ஹாஜ்ஜா பி.எச்.எம்.கிதுரு ஃபாத்திமா, ஹாஜ்ஜா ஃபாத்திமா பத்தூல், ஹாஜ்ஜா அ.வஹீதா, ஹாஜ்ஜா எஸ்.ஓ.பி.ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழா கதீஜத்துல் ஜாஹிரா ஆலிமா முஅஸ்கரிய்யா கிராஅத் ஓதி அரங்க நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். ஹாஜ்ஜா எம்.ஐ.கதீஜத்துல் குப்றா ஆலிமா முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார். ஹாஜ்ஜா ஷர்மிளா பானு பாடல் பாடினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அ.சவ்தா உம்மாள், இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஃபவுஸியா, இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தொகுப்பாளர் புர்கான் பீவி இஃப்திகார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பின்னர், “ஊடகம்” எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டு கவியரங்கிற்கு பெண்களால் அனுப்பி வைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவ்வரங்கில் வாசிக்கப்பட்டது.
இறுதியாக, ஹாஜ்ஜா எஸ்.எம்.ஏ.சித்தி ஃபவுஸியா நன்றி கூற, ஹாஃபிழா வாவு எம்.எம்.மஹ்மூத் ஆஸியா துஆவுடன் மகளிர் அரங்கம் நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளனைத்தையும் கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி பேராசிரியை சுலைஹா சகீன் நெறிப்படுத்தினார். |