தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS மற்றும் BDS பயில - முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 6 அன்று நிறைவுற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது - முதல் கட்ட முடிவில் காலியாக இருந்த இடங்களும், மத்திய அரசு ஒதுக்கீட்டில் மிஞ்சிய இடங்களும், முதல் கட்டத்தில் இடம் கிடைத்து படிப்பை தொடர விரும்பாதவர்களின் இடங்களும் - பிற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
முதல் நாள் அன்று - ஏற்கனவே முதல் கட்டத்தில் கல்லூரியை தேர்ந்தெடுத்தவர்கள், தங்கள் கல்லூரியினை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
தற்போது இரண்டாம் கட்டத்துக்கான வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் - ஜெனரல் ரேங்க் 4000 வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அது தவிர BCM தர வரிசையில் 138 முதல் 190 வரை உள்ள மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross