சமச்சீர் கல்வி தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாணவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை சி.ஐ.டி. நகர் காலனி வீட்டில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:
சமச்சீர் கல்வி குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசுக்குக் கிடைத்த தோல்வியாக கருதாமல், ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருத வேண்டும்.
வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று கணக்கிடாமல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு:
ஏற்கெனவே உச்சநீதிமன்ற கருத்துகள் கேட்டு, அதன் அடிப்படையிலேயே திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
பாடப்புத்தகம்: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் பற்றியும் உயர்நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.
1. Re:சமச்சீர் கல்வி தீர்ப்பு ம... posted bysayedali (ABUDHABHI)[23 July 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6300
மொத்த தமிழ் நாடே கருணாநிதிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் தான்.இதில் சமச்சீர் கல்வி என்ன.ஜெயலலிதாவுக்கு அவருடைய ஆணவமும்,அவரை சுற்றி இருக்கும் சசிகலா பரிவாரமும் கருணாநிதி வகையராவுக்கு போனஸ் வரப்பிரசாதம்.ஜெயலலிதாவிற்கு என்ன தயிரியமும் நிர்வாகத்திறனும் இருந்து என்ன செய்ய.இந்த சமசீர் விவகாரத்தை அவர் கையாண்ட விதம் அவர்சம்பாதித்த மொத்த கிரடிட்டும் முகவின் அக்கவுண்டிற்கு போய்விட்டது.அங்கெ அடுத்த தலைமை இளைய ஸ்டாலினுக்கு மாற்றி தான் மறைவிலிருந்து டிராமா ஆட முக இப்போதே வியூகம் அமைக்கிறார்.மக்கள் மனம் மீண்டு முருங்கை ஏறப்போகிறது.பழைய குருடி கதவை திறடி.அடுத்த தேர்தலில் மீண்டும் கொள்ளை ஆட்சி. விதி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross