செய்தி எண் (ID #) 6751 | | |
திங்கள், ஜுலை 18, 2011 |
மும்மாவட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர்கள் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5055 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (43) <> கருத்து பதிவு செய்ய |
|
நாகர்கோவிலில் நடைபெற்ற மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழு போட்டியில் காயல்பட்டினம் மாணவர்கள் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறிலுள்ள செய்யிதினா இப்றாஹீம் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, 30.06.2011 அன்று திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழுப் போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்கள் அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில், காயல்பட்டினத்திலிருந்தும், இதர ஊர்களிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில், காயல்பட்டினத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் முதல் மூன்றிடங்களைத் தட்டிச் சென்றனர்.
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த ஹாஜி என்.டி.ஜமால் முஹம்மத் என்பவரின் மகன் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா சார்பில் கலந்துகொண்டு, இப்போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்.
வடக்கு ஆத்தூர், தஃவத்துல் ஹுதா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் சார்பில் கலந்துகொண்ட, காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த எம்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மகன் ஹாஃபிழ் எம்.ஏ.அபுல்காஸிம் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கலந்துகொண்ட, மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ என்பவரின் மகன் ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா மூன்றாமிடத்தைப் பெற்றார். |