ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்‘, ‘பராஅத் இரவு‘ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல பள்ளிவாயில்களில் இந்நடைமுறை ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது.
குருவித்துறைப் பள்ளியில்...
17.07.2011 அன்று இரவில் காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார்.
பிரார்த்தனையைத் தொடர்ந்து, கத்தீப் மவ்லவீ அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
ஜாவியாவில்...
காயல்பட்டினம் ஜாவியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமை தாங்கினார். கலீபத்துல் குலஃபா மவ்லவீ முத்துவாப்பா ஃபாஸீ, நிர்வாகி ஹாஜி ச.த.சதக்கத்துல்லாஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜாவியா அரபிக்கல்லூரி துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்புரையாற்றினார்.
பிரார்த்தனைக்குப் பின், கலந்துகொண்ட அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
|