Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted bykavimagan m.s.abdul kader (dubai)[25 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6400
அன்பு சகோதரர் அஹ்மத் மீரா சாஹிப் , CNASH மற்றும் உண்மையை அறிந்துகொள்ள உண்மையான ஆர்வம் காட்டும் தோழர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
மிகப்பெரிய உலமாக்களின் பிரசங்கத்தில் எல்லாம் நான் செவியுற்றது தவறாகிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், இந்தக் கவிதையின் வரிகள் நபிமொழிக்கு எதிரானதுபோல சித்தரிக்கப்பட்டது.
எப்போதும் எதையாவது உளறித்தள்ளி, தப்பு தப்பாய் எழுதி நேயர்களிடம் மாட்டிக்கொண்டு, அங்கிருந்து ஓடி ஒளிந்து, இன்னொரு பதிவுக்கு வந்து, அங்கேயும் கூட்டத்தோடு கூட்டமாக மீண்டும் உளறிவிட்டு செல்கின்ற அறிவுஜீவிகளைக் குறித்து எனக்கு கவலையில்லை.
ஆனால் உங்களைப் போல் அறிவுசால் ஆர்வலர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நாளை மறுமையில் இறைவனுக்கும் பதிலளிக்கும் கடமை எனக்கிருக்கிறது.
மிகுந்த வேலைப்பளுக்கிடையில், நான் திரட்டிய ஆதாரங்களின் பாகம் மற்றும் குறியீடுகளை நான் இங்கு தருகிறேன். மொத்தத்தையும் டைப் செய்ய நேரம் இல்லாத காரணத்தினால், மேலதிக முழு விபரங்களை, இன்ஷாஅல்லாஹ் விரைவில் பூரணமாக அனுப்பி வைக்கிறேன்.
நூல் : புஹாரி. பாகம்: திருமணம் எண்: 5101
அறிவிப்பாளர்: உம்முஹபீபா பின்த் அபீ சுப்யான்( ரழி).
இந்த ஹதீஸில், அபூ லஹபிற்கு, நரகத்தில் இருவிரல் வழியாக எப்படி, ஏன் தண்ணீர் கிடைத்தது என்ற விவரம் இருக்கிறது. தயவுசெய்து பார்க்கவும்.
இந்த குறிப்பிட்ட ஹதீஸைக் குறித்த மேலதிக விபரங்களுக்கு, இப்னு ஹஜ்ருல் அஸ்கலாணி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பத்ஹுள் புஹாரியில் சிலாகித்து எழுதி இருப்பதையும்,
அறிஞர் அப்துல் ரஜாக் அவர்கள் எழுதிய முசன்னத் கிதாப்: பாகம்: ஏழு, பக்கம்; 478,
பகவி அவர்கள் எழுதிய கிதாப் தரகுச்சுன்னா, பாகம்; ஐந்து,
பக்கம்;192,
பேரறிஞர் ஆமிரி அவர்கள் எழுதிய பகுஜத்துள் மகாபிழ், பாகம் ஒன்று, பக்கம்:41,
இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் எழுதிய அல்ஹிதாயா
வான் நிஹாயா என்ற கிதாபில் பாகம்: ஒன்று, பக்கம்:224, தைபவுத்தைபானி அவர்கள் எழுதிய ஹிதாயத்துல் அன்வார் என்ற கிதாபில் பாகம்: ஒன்று பக்கம் எண்: 134ஐ திறந்த மனதோடு பார்வையிடுக.
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக, வேறு எதை விடவும், எவரை விடவும் அண்ணலெம் பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது அன்பு செலுத்துபவனாகவும் இருக்கிறான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross