Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byCnash (MAKKAH )[25 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6410
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த கருத்தை போட மாட்டீங்க என்று ஒரு புறம் நினைத்தாலும், இந்த கவிதையில் வந்த குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான கருத்தை அனுமதித்து இருப்பதால் மறுக்க வேண்டியது எங்கள் கடமை என்ற அடிப்படையில் post பண்ணுறேன். அவர் சொன்ன கவிதையை கூட ஒரு மேலோட்டமாகத்தான் பார்த்தோம், ஆனால் சகோ. அஹ்மது முஹையத்தீன் சிந்திக்க தூண்டிய வரிகள் என்று சொன்னபிறகு அப்படி என்ன இருக்கு சிந்திக்க என்று பார்த்தல் அபத்தங்கள் தான் மிஞ்சுகிறது!!
கவிதை வரிகளை சிந்திக்கும் முன் நரகம் பற்றி அல்லாஹ்வின் வேதம் சொல்லும் சில வரிகளை பாப்போம்.
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டு இருக்கும், அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டு (அதிலே) உறுதியாக நின்றவையுமாகும் கொழுந்து விட்டு எறியும் நெருப்பிற்க்கே அவை புகும்...கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு) நீர் புகட்டபடும் (88 : 2 -5 )
அவர்கள் அதில்(நரகில்) குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்: கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர (78 :24 /25 ).
இங்கே நரகத்தில் திண்டடியவனுக்கு தண்ணீர் என்று சொல்ல வருவது அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு இரு கரங்களும் நாசமாகட்டும் அவன் நரகம் புகுவான் என்று சொல்லப்பட்ட அபுலஹப், தான் தம்பி மகன் பிறந்த செய்தியை கொண்டாடும் விதமாக தன சுட்டு விரலை காட்டி ஒரு அடிமை பெண்ணை விடுதலை செய்தான் அந்த விரலை நரகம் தீண்டாது அதில் இருந்து சுரக்கும் நீரில் நரக தாகம் தீர்த்து கொள்வான் என்று நபியை புகழ்கிறோம் என்ற பேரில் கட்டு கதைகளை பல மேடையில் பேச கண்டுஇருக்கிறோம்..அதற்கு ஆதாரமாக புஹாரி யில் இடம் பெற்று எல்லா ஹதீத்கலை அறிஞர்களாலும் நிராகரிக்கப்பட்ட குர்ஆனுக்கு முரண்பட்ட கீழ்கண்ட ஹதீஸை சொல்லுவார்கள் (புஹாரி 5101 ).
இதுவும் கூட நபி சொன்னதாக இல்லாமல் உர்வா என்பவர் யாரோ ஒரு நபியின் குடும்பத்தினர் இவ்வாறு கனவில் கண்டதாக கூறப்படும்.. இந்த ஹதீஸ் பல்வேறு காரணங்களுக்காக அறிஞர்களால் நிராகரிக்க படுகிறது... உர்வா என்பவர் நபி தோழர் இல்லை.. அவர் காலத்தில் வாழ்ந்தவரும் இல்லை. இரண்டாவது யாரோ ஒருவர் கண்ட கனவு இறை வேதம் அல்ல.. நபி வழியும் இல்லை... கனவில் கண்டதுபோல் நடக்கணும் என்ற சட்டமும் இல்லை..... இவற்றுக்கெல்லாம் மேலாக நபியின் அங்கீகாரமோ..அல்லது நபிக்கு அறிவிக்கப்பட்ட சம்பவமும் இல்லை என்று எல்லோரும் ஒருமித்து நிராகதித்ததை கவிதை என்ற பேரிலும் மார்க்க பயான் என்ற பேரிலும் உளறல்களாக நபியை போற்றுகிறோம் என்று அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக சொல்லிக்கொண்டு இருகிறார்கள்.
எத்தனையோ எதிரிகள் நபிகளாருக்கு இருந்தும் இவனை மட்டும் அல்லாஹ் குறிப்பிட்டு சாபம் இட்டு... ஆயத்தை இறக்கி இருக்கிறான்.. ஆனால் நபியின் பிறப்பை போற்றுகிறோம் என்ற பேரில் நரகத்தில் எரிபொருளாக அல்லாஹ்வால் சொல்லப்பட்ட அபுலஹபை சங்கை செய்கிறார்கள்.
அவன் நபி பிறந்தார் என்று கொண்டாடவில்லை. நபி அவர்கள் பிறக்கும் போதே நபியாகவும் பிறக்க வில்லை... அவன் தனக்கு மகன் பிறந்தான் என்ற செய்தி கேட்டுதான் கொண்டாடினான்.. அடிமையை விடுதலை செய்தான்... என்றைக்கு நபி என்று தெரிந்ததோ எப்போது அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று (உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக 26 ;214)... என்ற அல்லாஹ்வின் வசனம் இறங்கிய பொது SAFA மலையில் தன் சொந்தகாரர்களை எல்லாம் அழைத்து இந்த ஓர் இறை கொள்கையை சொன்னார்களோ அன்றைக்கே மண்ணை வாரி வீசி, நீ நாசமாக போவாய்...என்று சொல்லி அல்லாஹ்வின் சாபத்தையும் பெற்றான். கவிதை கதை என்ற பேரில் அவனை சங்கை செய்கிறீர்களா, அல்லாஹ்வின் சொல்லுக்கு மாறாக?
இன்னொரு சம்பவமும் எந்த இறை வசனத்தில் அற்புதமாய் ..ஒரு முன் அறிவிப்பாக அல்லாஹ் தந்திற்கிறான்..இந்த குர்ஆன் வசனத்தை ஆராய்ந்த Dr .கேரி மில்லர் (Dr . Gary Miller ) என்ற கனடாவை சேர்ந்த கிறிஸ்துவ அறிஞர்... அதில் உள்ள அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்றார்.. அவர் செய்த ஆய்வின் படி, இது அல்லாஹ்வின் வார்த்தைதான் இல்லை என்றால்...எத்தனையோ கபீர்கள் அவனுடன் சேர்ந்து நபியை எதிர்த்தவர்கள் எல்லாம் பிற்கலத்தில் இஸ்லாத்தை தழுவி நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடி கொண்டனர். ..இவன் எந்த வசனம் இறங்கி 10 வருட காலம் வாழ்தும்..இஸ்லாத்தை ஏற்க வில்லை.. அல்லாஹ் கூறியபடி நரகவாதியாகவே இறந்தான்..அவன் மட்டும் நினைந்து இருந்தால் அந்த நபியையும் அவர் சொன்ன இறை வழியையும் பொய்யாக்க நினைத்து இருந்தால்...பேருக்காக இஸ்லாத்தை ஏற்று... முஸ்லிமாக தன்னை அடையாளம் காட்டி இருந்தால்... நபியின் பிரசாரத்தை அப்பவே பொய் என்றும் இறை வேதத்தை பொய் என்றும் நிருபித்து இருக்க முடியும்..அதற்கான எவ்வளவோ சூழ்சிகளை செய்த எதிரிகள் அபு லஹபை தூண்டி அவனை இஸ்லாத்தை ஏற்க சொல்லி செய்து இருந்தால் அன்றே எல்லா பிரசாரமும் பொய்த்து பொய் இருக்கும்.. அதற்கான எந்த வழியும் எண்ணத்தையும் கொடுக்காமல் அல்லாஹ் தன வேதத்தையும் தன் தூதர் சொன்னதையும் உண்மை என்று காட்டி விட்டான்.. இதுவே அவன் வேதம் என்பதற்கு சான்று என்று ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றார்.
இப்படி எல்லாம் சம்பவங்கள் இருக்க இல்லாத ஒன்றை குர்ஆனுக்கு முரணான ஒன்றை கூறி அதனை சிந்திக்க வேண்டும் என்றும் தூண்டி இஸ்லாத்தின் பால் வருகின்றவரையும் திருப்பி விடாதிர்கள் என்பது தான் எங்கள் தாழ்மையான வேண்டுகோள்... இது பற்றி மேலும் விளக்கம் ஆதாரங்கள் வேண்டும் என்றல் கேளுங்கள் தருகிறோம்... மறுப்பு இருந்தால் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கொண்டு சொல்லுகள்.. உண்மையாக இருக்கும் பட்சத்தில் தவறுகளை திருத்தி கொள்கிறோம். மேலும் நபி அவர்களுக்கு தெரியாது ஒன்றும் இல்லை.. என்பது போலவும் சில ஆட்சேபனை குரிய வரிகள் எங்க சொல்லப்பட்டு இருக்கிறது... அதையும் வாய்ப்பு தந்தா விளக்கம் சொல்ல்லலாம்.. அல்லாஹ் மிக அறிந்தவன்..
Admin : தவறனா கவி வரிகள் இருந்தது. மார்க்கத்தில் இல்லாதது பரப்ப படலாம் என்று ஆதாரத்துடன் மறுத்து சொல்லிர்கிறோம்.. இதில் எந்த குழப்பத்திற்கும் பிரச்சனைக்கும் இடம் இல்லை... எங்கள் கடமை சுட்டி கட்டி விட்டோம்.. எங்கள் கருத்தில் தவறு இருந்தால் அவர்க்கும் மறுப்பு சொல்லலாம்.. ஆரோக்கியமான விதத்தில்.. எங்கள் கடமையே நான் செய்து விட்டோம்... இதை போஸ்ட் செய்தால் உங்கள் கடமையை நீங்க செய்தவர்களாக ஆவீர்கள்...... எதற்காகவோ பிரசுரம் பண்ணாமல் recycle bin லே போடுறதும் உங்க முடிவை பொருத்தது ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross