எதிர்பார்த்த ஒன்றுதான்! posted bykavimagan m.s.abdul kader (dubai)[26 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6423
இறைமறையுடன் நபிமொழியும், நபிமொழியுடன் இறைமறையும்
மோதிக்கொள்வதாக கூறி, நூற்றுக்கணக்கான பலமான ஆதாரம்
உள்ள ஹதீசுகளை ,சஹாபாக்கள்,இமாம்கள், சன்மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கங்களை எல்லாம் ஆராயாமல், தமது அரைகுறை புத்தியால் ஆய்வு செய்து, தள்ளுபடி செய்துவிட்ட மேதைகள் மற்றும் நவீன அறிஞர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்.
இப்போது நான் ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் முன்வைக்கிறேன். அருமை நாயகம் ( ஸல் ) அவர்கள், தமது பெரிய தந்தையான அபூ தாலிப் அவர்களுக்கு, நரகவேதனை இலேசாக்கப்படும் என்று சொன்ன ஹதீஸை நம்புகின்றீர்களா? இல்லை அதனையும் சீறாப்புராணம், மஸ்தான் சாஹிப் பாடல்களுடன் சேர்த்து விட்டீர்களா? என்பதை சொல்லவேண்டும். உங்கள் பதிலின் அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் விவாதத்தை தொடர்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross