கவிதையும் பொய்யும் posted bySalai Sheikh Saleem (Dubai)[27 July 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6446
சகோதரர் எனது பால்ய நண்பர் அப்துல் வாஹித் அவர்களே!
அருள்மறை திருக்குர்ஆனே ஓர் இலக்கிய கவிதைக் களஞ்சியம்தான். நீங்கள் எடுத்துக்காட்டிய திருமறை
வசனம் சரியானது. ஆனால், அர்த்தத்தைத்தான் உங்கள் தேவைக்கேற்றவாறு எழுதி உள்ளீர்கள்.
இந்த வசனம் மூலமாக, இறைவன் சொல்லவருவது, இலக்கிய நயமிக்க இந்த குர்ஆன் தன்னால் வழங்கப்பட்டது.
இது முஹம்மத் நபி அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை உணர்த்தும் முகமாக, நபி அவர்களுக்கு தான் கவிதையைக் கற்றுத்தரவில்லை என்றும் அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும், தனது ஆளுமைத் தன்மையை பறைசாற்றுகின்றான்.
மேலும், இதற்கு மாறுபாடான கவிஞர்களைக் குறித்தே, அவர்களை பின்பற்றுபவர்கள் வீணர்கள் என்றும்
கூறுகிறான். இறைமறையின் வசனங்கள் கடல் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு கருத்தாளம் மிக்கவை அவற்றை எப்படியும் நமது இஷ்டப்படி வளைத்துகொள்ளலாம் என்பது மோசக்கரர்களின் யுக்தி.
எனக்குள்ள மனவேதனை எல்லாம், எத்தனையோ நல்ல பல கவிஞர்கள், நாயகம் (ஸல் ),உமர் ( ரழி ), மற்றும் நபித்தோழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள் தெளிவாக இருக்கும்போது, பொத்தாம்பொதுவாக எல்லா கவிஞர்களையும் பொய்யர்கள் என்று தாங்கள் சித்தரித்து இருப்பதுதான்.
ஸஹிஹ் பஹாரி மறுக்கப்பட்டு, இப்போது வைரமுத்து வந்திருப்பது பற்றி என்ன எழுதுவது?
கவிதைக்குப் பொய்யழகு என்று எவனோ சொன்னான் என்றால் அவர்கள் பொய்யர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையின் நிழலில் நாம் அனைவரும் வாழ்வதற்கு
வல்ல நாயன் துணை புரிவானாக! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross