Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byjamal (colombo)[28 July 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6466
தம்பி வி.எஸ்.எம். அலி அவர்களே!
உங்களது கருத்துக்களை முற்றிலும் படித்துவிட்டுத்தான் நான் பதில் எழுதுகிறேன். உங்களின் கருத்தை கண்டித்து மாடரேட்டர் எழுதிய பிறகும் கூட இன்னும் பிடிவாதம் பிடித்துக் கொண்டு, விதண்டாவாதம் செய்கிறீர்கள். குத்துக்கல் தெருவிலிருந்து சதுக்கைத் தெருவை சுற்றி குத்துக்கல் தெருவிற்கு வருவதற்கு அரை மணிநேரம் ஆகுமா? என்று கேட்டால் விதண்டாவாதமா?
உங்களின் கூற்று முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. தான் சொல்வது சரி என்று நிரூபிக்க பல பொய்களை சொல்லிக் கொண்டே செல்கிறீர்கள். குத்துக்கல் தெருவிலுள்ள நீங்களே இரவில் போடப்பட்ட மேடை தங்களுக்குத் தெரியாது என்கிறீர்கள். இதை எப்படி நம்புவது?
உங்களின் கற்பனையில் மற்றொரு மைல்கல் நான் இந்த இணையதளத்திற்கு புதிது என்பது. இணையதள பதிவு பட்டியலைப் பார்த்தால் நான் எப்போதிலிருந்து இருக்கிறேன் என்று தெரியவரும்.
ஊரில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் (ரோட்டை அடைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வது) நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லியிருப்பின் மிகவும் பாராட்டிற்குரியது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். தன் விருப்பத்தை விட பொது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எங்களது மனமார்ந்த நன்றி! விஷயங்களை தெளிவுபடுத்தத்தான் இந்த கருத்துப் பரிமாற்றமே தவிர யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களின் கருத்துக்களுக்கு எங்கள் நன்றி!
மார்க்கவிஷயங்கள் பற்றி எழுதியிருக்கும் நபர்களில் ஒருவர் பிறந்த நாள் விழா கிறித்துவர்களின் கலாச்சாரம் என்று எழுதியிருக்கிறார். நமது குழந்தை பிறந்தால் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர், நர்சுகள் மற்றுமுள்ளவர்களுக்கு சந்தோசத்திற்காக சாக்லேட் மற்றும் இனிப்புகள் வழங்குகிறீர். உங்கள் குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவது மட்டும் மாற்றுக் கலாச்சாரம் இல்லையா? தெருவுக்குத் தெரு, பள்ளிக்கு பள்ளி சுவர்களில் குர்ஆன் ஆயத்துக்களை எழுதிக் கொள்வது எந்த கலாச்சாரம்? அதேபோல் பெண்களை பேராட்டம், மறியல் என்ற பெயரில் நடுரோட்டிற்கு இழுத்துவருவது இஸ்லாமிய கலாச்சாராமா? இன்னும் சொல்லலாம்....
நபிகளாரின் பிறந்த நாளை அல்லாஹ் அல்லவா கொண்டாடியிருக்கிறான் நரகவாதி அபூலஹப் தனது ஹபீபின் பிறந்த செய்தி கேட்டு அடிமையை விடுதலை செய்ததற்காக, நரகிலிருந்தாலும் அவர்களின் மேன்மையை விளங்கும்படி செய்வதற்காக அல்லாஹ் கொடுத்ததல்லவா அது. அதையும் கூடாது என்கிறீர்கள்.
ஏனெனில் தாங்கள் கூறும் ஷாபி இமாம், மாலிகி இமாம் போன்றோர் கூறியதாக சொல்பவைகள் முழுமையானதாக இல்லை. அதற்கு வைக்கப்பட்ட பொருளும் முழுமையானதாக இல்லை. நீங்கள் பி.ஜே. போன்றவர்கள் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்புகளிலிருந்து ஆதாரங்களை காட்டுகிறீர்கள். நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகும் திரும்பத் திரும்ப அதையே செய்கிறீர்கள். அதை விட்டு முதலில் திரும்புங்கள்.
ஒருவர் சொல்கிறார் நபிமொழி குர்ஆனுக்கு முரண்படுவதுபோல் தோற்றம் தெரிகிறதே! என்று. அதுதான் நமது சிற்றறிவுக்கு எட்டியது. அல்லாஹ் அதற்கென்றே ஹதீதுகளின் தரம் பற்றி அறியவும், ஹதீதுகள் குர்ஆனுக்கு முரண்படுகிறதா? என்பது பற்றி அறியவும் ஆய்வாளர்கள், இமாம்கள் இருக்கின்றனர்.
அவர்கள் ஏற்கனவே அதற்குரிய பதில்களை எழுதி சென்றுவிட்டனர். தயவு செய்து அதைப் பார்த்துக் கொள்ளவும். நேரடி தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்த்து இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross