சகோதரர் ஜியாவிற்கு! posted bykavimagan m.s.abdul kader (dubai)[29 July 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6497
அன்பிற்கினிய சகோதரர் ஜியாவுதீன் அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
நமக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், பல்வேறு பதிவுகளில் பலமான கருத்துமோதல் எழுந்தபோதும், தங்களது சமூக அக்கறை மற்றும் தமிழைக் கையாளும் முறை ஆகியன குறித்து, அடிமனதில் எப்போதும் தனித்த ஒரு மரியாதை, அன்பு எனக்குள் உண்டு.
எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் தங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள், சிரமங்களுக்கு மத்தியில் எழுதும் கருத்துக்கள் பலநேரங்களில் காயங்களுக்கு மருந்தாகவும், சிலவேளைகளில் அதுவே காயங்களுக்கு காரணியாகவும் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது.
தாங்கள் வலைதளத்தில் அதிகம் கருத்து எழுதுவதற்கு முன்பே
அமீர மலருக்கு தாங்கள் அனுப்பிய ஆக்கங்களை, மலர்க்குழுவில்
ஒருவன் என்ற அடிப்படையில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பை பெற்று இருந்தேன். ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த தங்களது கருத்துக்கள் எழுத்துக்கள் தொடரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் ஆவலும் வேண்டுகோளும்.
எல்லாம் வல்ல இறைவன், நமக்கு தந்திருக்கும் இந்த ஆற்றலை நமது ஊர் மற்றும், சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். தொடர்ந்து சாளை நவாஸ் காக்கா அவர்கள் எழுதிய கருத்தினை இத்தோடு இணைத்து மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross