Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byசாளை நவாஸ் (sg)[31 July 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6524
இரண்டு நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர். உரையாடல் பின்வருமாறு
ஒருவர் : மச்சான், தலைய தூக்கி பிறை தெரியுதான்னு பாரு
மற்றொருவர் : தலைய தூக்கி பார்த்தா ஒரே செல் போன் டவரா தெரியுது.
ஒருவர் : சரி வா கடற்கரை போய் பார்ப்போம்.
மற்றொருவர் : வேண்டாம்பா, போன மாசம் அங்கே போய் கண்ணாடி கிளாஸ் காலை பதம் பார்த்துட்டு, நா வரலே.
(சிறிது நேரம் கழித்து )
ஒருவர் : வர வர காதும் சரியாய் கேட்க மாட்டேன்குது
மற்றொருவர் : ஏன்?
ஒருவர் : இல்லப்பா, இடது காத்து பக்கம் இன்னிக்கி நோன்புன்னு விளங்குது, வலது காத்து பக்கம் நாளைக்கி நோன்புன்னு விளங்குது. எந்த காதுல பிரச்சினைன்னு தெரியலே..
மற்றொருவர் : மாப்ளே!! உனக்கு காதுலே இல்லை மூளைலே தான் பிரச்சினை. அது அந்த பக்கத்துல உள்ள பள்ளி, இது இந்த பக்கத்துல்ல பள்ளி.
ஒருவர் : அப்போ ரெண்டு பெருநாள் வருமேடா?
மற்றொருவர் : வரட்டுமே. நமக்கு ஒரு நாள் கஞ்சி எக்ஸ்ட்ரவ கெடைக்கும், ரெண்டு தமாம் சாப்பாடு கிடைக்கும். அப்புறம்
பக்கத்தில் இருக்கும் பெரியவர்கள் : அப்புறம் உங்களுக்கு தர்ம அடி கிடைக்கும். ஒளிஞ்சி போங்கடா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross