செய்தி: ஹிஃப்ழு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு! ஹிஃப்ழு முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆண்டு முதல் பரிசுகள்!! சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹிஃப்ழு போட்டியில் வென்ற ... posted byT.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852rr)[01 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6552
News ID # 6790
திங்கள், ஜுலை 25 , 2011
ஹிஃப்ழு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு! ஹிஃப்ழு முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆண்டு முதல் பரிசுகள்!! சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு!!!
1. மும்மாவட்ட போட்டியில் வென்ற ஹாஃபிழ்களுக்கு ஊக்கப்பரிசு
2. வரும் ஆண்டு முதல் ஹிஃப்ழு முடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை:
3. ஓராண்டில் ஹிஃப்ழு முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு
4. நன்றி: காயல்பட்னம்.காம்
அன்பளிப்புகளில் மிக உயர்ந்த அன்பளிப்பைக் கொண்டு இவ்விளவல்களைச் சங்கை செய்வோம்.
அல்ஹம்து லில்லாஹ்..... நம்மில் பலரும் எதிர் பார்த்த ஒரு அறிவிப்பை இதோ.......... சிங்கை கா.ந.மன்றம் அறிவித்து விட்டார்கள். ஜஜாகல்லாஹு ஹைர்.
மாஷா அல்லாஹ், சிங்கப்பூர் காயல் கா.ந.மன்றம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மாண மிக அருமையான திட்டங்கள். உலக படிப்புக்களுக்கு நாம் செய்யும் உதவிகளை போல் நமது மார்க்க கல்விக்கான உதவிகள் மிகவும் அவசியமானவை. இவைகள் மூலம் நமது பிள்ளைகளின் ஆர்வங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஊக்கப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்
ஆஹா எவ்வளவு மனஷுக்கு சந்தோஷமான அதே நேரம் இறைவனுக்கும் அதிக நன்றி கூறக்கூடிய செய்தியென்பது அல்லாஹ்.ரஸூலுக்கும் எனக்கும்தான் தெரியும். ஏனெனில் சுமார் 15/20 ஆண்டுகால முதல் ஹாங்காங்கில் இருந்து லெட்டெர் மூலமும், மீடியாக்கள் மூலமும் பல காயல் நலமிகளின் முக்கியஸ்தர்கள், துபாய் காயல் நலமன்ற நிர்வாக உறுப்பினரான ஜனாப்.ஜே.எஸ்.புஃகாரி (இவர் சென்ற மாதம் யூ எஸ் ஸி யில் நடந்த ஸ்டேட் டொப்பர்க்கு பாராட்டு விழாவில் ஹிஃப்ழை கவ்ரவப்படுத்திய ப்ளஸ் 2 ஹாஃபிழுக்கு பரிசு கொடுத்து முதல் பாராட்டை பெற்றவர்) அவர்கள் மூலமும் சென்ற 2-3 வாரங்களுக்கு மத்தியிலும் வெப் ஸைட் காறர்கள் மூலமும் இப்படியுமொரு ஏற்பாடுகள் கட்டாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த எனக்கு இந்த சந்தோஷமான செய்தி கிடைத்தால் குடல் குளுந்தாப்பல இருக்காதா என்னா ? (இரண்டி றக்கா அத் “ ஸலாதுஷ் ஷுக்கூறும் தொழுது இருக்கிறது) அல்ஹம்து லில்லாஹ்.
மேலும், சிங்கை கா.ந.மன்றத்தார் களுக்கு அபரிமிதமான நன்றியினையும். லாட் ஆஃப் தேங்க்ஸையும் அறிவித்துக்கொள்கிறேன். ஜஸ்ஸாக்குமுல்லாஹ ஃகைறா, ஃகைறன் ஜஸீலா . நிற்க, இந்த மூன்று மாவட்ட கிறா அத் போட்டியின் வெற்றியாளர்களுக்கு கொடுத்த தொகை சிறிதாயினும் மிகப்பெரிய ஃதவாபை நிச்சயம் தந்து கொண்டே இருக்கும் என்பதில் இருவகை கருத்து என்றுமே இருக்காது. மாஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த எண்ணத்தை தந்த நல்லுள்ளங்கள் போல் பற்பல யுனிவெர்ஸல் காயலர்களுக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.
இதில் ஒரு விசேஷம் என்ன வெனில் இவ்வுலக வாழ்வின் ப்ளஸ் 2. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முறை,பொருளாதாரக் கல்விக்காக கொடுக்கும் ஊக்கப்பரிசைவிட ஆஃகிரத்தை நாடி ஏழு வருடங்களுக்கு மேல் தம் வாழ்நாட்களை செலவளிக்கும் மாணவர்களுக்காக செலவளிப்பது கொண்டு ஆஃகிறத்தில் நமக்கு அபரிவிதமான நண்மையை நாடி அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அல் குற் ஆன் 9-24 ஆயத்து வின் படி நடந்த நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்துவிட்ட நற்பாக்கியத்தைப் பெற்றவர்களாகிறோம். அல்லவா.?
அந்த எண்ணத்தின் படி அல்லாஹ் இந்த நல்ல எண்ணங்களைத் தரும்பட்சத்தில் ஹிஃப்ழ், மற்றும் கிதாபு ஓத ஆரம்பம் செய்யும் இவ்வருட புதிய மாணவர்களுக்கும் அதுபோல் மாணவி களுக்கும் ஒரு ஊக்க தொகையும் அளிக்க வேண்டும் என மிக ஆவலோடும் உரிமையோடும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். யற் ஹமுகுமுல்லாஹ்.!
இந்த ஆஃகிறத்துக்கான இருமேனி,மும்மேனிக்குமேல் காணும் விளைச்சலுக்கு இந்த (1432=2011) றமழானுல் முபாறக்கும் ஒரு ஸீஸன் என்பதை ஞாபகம் செய்து கொள்கிறேன். குற் ஆன் கூறியபடி விளைச்சலுக்கு உடனடி ஏற்ப்பாடு செய்யுங்கள்.
அதுபோல் ஏழு வருடங்கள் தியாக உணர்ச்சியால் ஓதி தஹ்ஸீல் ஆன ஆலிம்களுக்கும் ஒரு கனிஷமான லானா (6லக்கம்) தொகையும் இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்யும் காலம் நெருங்கி இருக்கிறது என்பது கண்கூடு.அல்ஹம்து லில்லாஹ். முறைப்படி மஷூராக்கள் செய்து முடிவுகளை ஏற்பாடு செய்வோம், அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross