ஊரின் எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு பிரசாரம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
அதிலும் சாளை நவாஸ் அவர்களின் கருத்து ஆழமாக சிந்திக்க தூண்டுகிறது, ஏனெனில் இறுதியாக கழிவு கொண்டு விடப்படும் இடம் நம் ஊர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மற்றொன்று தூத்துக்குடி ஆன் லைனில் வந்த செய்தி
(sk -ஸாலிஹ் அவர்களின் பதிப்பு) " யார் எதிர்த்தாலும் இத்திட்டத்தை அரசு முடித்தே தீரும்" அதெப்படி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசாக இருந்தாலும் எத்திட்டத்தையும் நடைமுறைபடுத்த முடியுமா?
"அரசு ஊழியர்கள் மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல கடமைப்பட்டவரே தவிர அரசின் பிடிவாத செயலுக்கு சங்கு ஊதாக்கூடது"
ஊரின் நன்மைக்காக அரசியல் அங்கத்தில் சேர்ந்தவர்களும், தயவுசெய்து ஒன்றிணைந்து இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். "எந்த ஒரு திட்டமானாலும் ஊருக்கு நீண்ட கால நன்மை பயக்கக்கூடியதையே செயல் படுத்தவும்"
இதற்கு ஆதரவு கொடுக்கும் "ஊழல் வாதிகளே" உங்களுக்கு தேவை என்றால் எதையும் எப்போதும் செய்து விடலாம் இல்லையா? ஏன் அடித்த கொள்ளை, அடித்துக்கொண்டிருக்கும் கொள்ளை, இனி அடிக்கபோகும் கொள்ளைக்கும் சேர்த்து கணக்கு எழுதி விட்டீர்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross