தொல்லை இருக்கக்கூடாது. posted byN.S.E.MAHMOUD (Yanbu, Saudi Arabia)[25 October 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 664
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
DCW நிறுவனம் புதியத் தொழிற்சாலையை துவக்குவதால் நம் ஊரும் , சுற்றுவட்டாரங்களும் மேலும், மேலும் அசுத்தக் காற்றை சுவாசிக்க வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளாகிறோமேத் தவிர அதிலிருந்து விடுபடுவதாக இல்லை.
சகோதரர் ஹபீப் முஹம்மது சொல்வது போல் DCW நிறுவனத்தில் நம்மவர்கள் வேலையைத் தேடிப் பெற்றுக்கொள்ளவும்,
அந்த நிறுவனத்திலிருந்து நம்ம ஊரின் முன்னேற்றத்துக்காக ( நகரின் பராமரிப்புக்காக ) அதிகமான வரிகளை அல்லது அதிகமதிகமான நன்கொடைகளை பெற்றுப் பயனடையவும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்வார்களாக.
இவைகளைவிட முக்கியமானது என்னவென்றால்.
= இப்போதைய நிலையில் அவர்கள் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள்? அதனால் நம் மக்களுக்கு ஏதும் பாதிப்பு உண்டா?.
= மேலும் (CHEMICAL) இரசாயனக் காற்றால் நம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகிறதே! அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா?
= அப்படி பாதிப்புகள் நமக்கு இருந்தால் அவைகளை எந்த வழியிலாவது எதிர் கொண்டு களைந்திட வேண்டும்.
= நம் மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் நம் மக்களுக்கு வேலை தருவதிலோ அல்லது
ஊருக்கு வரியைத் தருவதிலோ எந்த ஒரு பிரயோஜனமுமில்லை.
= DCW நிறுவனத்தால் நம் மக்களுக்கும், ஊருக்கும் நன்மை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தொல்லை
இருக்கக்கூடாது.
= எனவே அவர்கள் புது தொழிற்சாலை தொடங்குவதற்கு நம்மால் ஆன எதிர்ப்பை முடிந்தால் சட்டப்பூர்வமாக செய்திட வேண்டும்.
= ஆகவே இதை சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள் என்று எண்ணுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross