Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம... posted byShameemul Islam SKS (Chennai)[04 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 6652
பாதாள சாக்கடை குறித்து இப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் பதியப்பட்டுள்ள நிலையில் நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.
1 ) இத்திட்டம் ஊர் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கும் திட்டம்.
2 ) ஊரெங்கும் நாற்றங்கள் வீசும்.
3 ) நான்கு கால்கள் நடமாட்டம் பெருகும்.
4 ) மேலும் குப்பைக் கூளங்கள் சேரும்.
5 ) பிற ஊர்களின் நாற்றங்களும் காயல் வழியாக கடலுக்கு அனுப்பப்படும்.
6 ) ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதாதென இன்னொரு புதிய பிரச்னைக்கு இப்போது வழிகோளப்பட்டுள்ளது.
7 ) ரோடுகளில் இனி எந்த கல்யாண காட்சிகளும் நடத்த முடியாமல் போகும்.
8 ) கையை தூக்காமல் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு நன்றி.
9 )நகர் மன்றத் தலைவர் கையை உயர்த்தியதற்கு வருத்தங்கள்.
11 ) ஒருசில கருத்துக்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு எதிர்ப்பதற்கான காரணங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 ) ஏற்கனவே நகராட்சிப் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது போக இது இன்னொரு நல்ல வாய்ப்பு.
14) நிற்க, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரித்தனர் என்ற கருத்து இதுவரை இங்கு வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்தால் நலம்.
15 ) நகர் மன்றத்தலைவர் எதனால் கையை உயர்த்தினார்கள். தாமாகவே எடுத்த முடிவா அல்லது நிர்ப்பந்தமா என்பதை அவர்களே சொன்னால் நலம். தாமாகவே எடுத்த முடிவு தானென்றால் அதற்கு எதிராக இங்கு எழுப்பப்பட்டுள்ள ஐயங்களுக்கான விடைதான் என்ன என்பதை தயவு செய்து பதிவு செய்தால் நலம்.
நம்மூருக்கு அருகில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தாங்கள் போய் வராதவர்களா, ஊரில் நுழையும் முன்பே நம்மை அந்த நாற்றங்கள் தானே வரவேற்கின்றன. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
16 ) நகராட்சிக் கூட்டத்தில் அதன் ஆணையாளர் அவர்கள் பெருவாரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் ஏற்கனவே எடுத்து வைத்த முடிவை அறிவித்திருப்பது ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. அவர்களும் அதற்கு பதிலளித்தால் நலம்.
ஐய்யா, நாங்கள் ஐந்து வேலை பள்ளிவாசல் சென்று தொழுது வருபவர்கள். எங்கள் ஆடைகளில் ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் இறைவன் அத்தொழுகையை ஏற்றுக்கொள்ள மாட்டான். இது இவ்வாறிருக்க பாதாள சாக்கடையுடன் கூடிய காயல் நகரை மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா.
மேலும் அம்மழைக் காலத்தில் (பாதாள)சாக்கடை ஓடும் நகரங்களில் கொசுக்களால் பரவும் -பெயர் தெரியாத அல்லது தங்களைப் போன்ற ஆணையர்கள் பெயர் வைக்கத் திணறும்- புதுப்புது நோய்களை நினைத்தாலே எங்கள் உடலும் உள்ளமும் நடுங்குகிறது ஐயா. எங்களின் இந்த ஐயங்களுக்கு பதிலளிப்பீர்களா ஐயா.
அது போல அன்பு அண்ணன்கள் காசிராஜனும் திருத்துவராஜ் அவர்களும் தாங்கள் ஊரே எதிர்க்கும் இந்த திட்டத்திற்கு ஏன் ஆதரவு தெரிவித்தீர்கள் என்று கூறினால் நலம். உங்களுக்கும் சேர்ந்து தானே இந்த பிரச்னைகள். விளக்கம் தாருங்கள்.
நம்மை விட்டு சென்று விட்ட நம் முன்னோர்கள் பாக்கியம் மிக்கவர்கள். இந்த அவலங்களை எல்லாம் பார்க்காமலே போய் விட்டார்களே அதனால் தான்.
நாம் எவ்வளவு தான் செய்திகளைப் பதிவு செய்ய இந்த கீ பேடைத் தட்டினாலும் என்ன பயன். அரசின் பிடிவாதமான முடிவுகளை எதிர்த்திட நமக்கென்ன, ஆற்றலா உள்ளது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross