மக்களின் விருப்பத்திற்கு மாற்றமானதை ............... posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[04 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6670
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தூத்துக்குடி ஆன்லைன் வலைதளத்தில் வந்திருக்கும் செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கருத்தை பதிகிறேன்.
அதாவது பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட ஓட்டெடுப்பு எடுக்கப்பட்டபோது வெறும் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தியிருக்கிறார்கள் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு கூட ஆதரவு இல்லாத நிலையில் எப்படி தீர்மானம் நிறைவேற்றப்படும் ???.
மேலும் கமிஷனர் கண்ணையா அவர்கள் பேசும்போது " பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது, எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் " என்றிருக்கிறார்!!!.
பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கையில் எதை அடிப்படையாக வைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கமிஷனர் சொன்னார் என்பது தெரியவில்லை?
பெருபான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேறினால்தான் இத்திட்டப் பணிகளைத் தொடங்க முடியுமே தவிர உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.
----------------------------------------------
மேலும் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் என்ன சொல்கிறது?
" காயல்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படி வழியுறுத்துகிறது.
ஆரம்பக் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிரபிக்கவில்லை - மாறாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படியே கடிதம் மூலம் வேண்டியிருக்கிறார்.
இதன் மூலம் நன்கு புலனாகிறது பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் எதுவும் செய்ய மக்கள் மன்றம் இடம் கொடுக்காது என்பது.
-----------------------------------------------
இந்த பாதாள சாக்கடை திட்டத்தினால் ஏற்படும் பல சிக்கல்களையும் அறிந்துணர்ந்த தமிழக முதல்வர் அவர்கள்
"பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் மட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் "என்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள், கடந்த பிப்ரவரியில் செய்தி தாளில் படித்தது.
ஆகவே , நகர் மன்றத்தின் உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி மக்களின் விருப்பத்திற்கு மாற்றமானதை திணிக்க முயல வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross