ஸஹன் சாப்பாடு posted bySK Salih (Kayalpatnam)[25 October 2010] IP: 59.*.*.* India | Comment Reference Number: 669
ஒன்றுக்கு மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் நமதூரிலுள்ள யாரோ ஒரு முன்னாள் சேர்மனோ, ஹாஜியாரோ உருவாக்கியதல்ல! நம் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் வழிகாட்டியான - நம் உயிரினுமினிய அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் காண்பித்த வழி!
இதை கடமைக்காக செய்த காலங்கள் தவிர்த்து, மனதார உணரத் துவங்கிய நாள் முதல் எனதில்லத்தில், நாங்கள் மனைவி மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் வாரத்திற்கு இருமுறையாவது (குழந்தைகளின் பள்ளி விடுமுறை நாட்களில்) ஒரே தட்டில் இணைந்து சாப்பிடுகிறோம்.
இதனால் அன்பு வளர்கிறது...
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை உருவாகிறது...
ஒருவருக்கொருவர் அறிவுரை சொல்ல முடிகிறது...
சாப்பிடும் குழந்தைகள் ஆங்காங்கே எழுந்து செல்லும் நிலை மாறி, உணவுப் பொருள் தீரும் வரை தட்டிற்கருகிலேயே அமர்ந்தாக வேண்டிய கட்டாயம் அவர்களையுமறியாமல் உருவாகிறது...
இன்னும் பலப்பல...
நண்பர்கள் ஒரே தட்டில் பலர் இணைந்து சாப்பிடுவதை ஆட்சேபிப்பதற்குப் பகரமாக, அனைவரும் தமது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்... தட்டுக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் கூறியிருந்தால் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்திருக்கும்.
ஒரே தட்டில் பலர் சாப்பிடும் இந்த நல்வழக்கம் முஸ்லிம்கள் செறிவாக உள்ள பல ஊர்களில் இன்று மறைந்துவிட்ட நிலையிலும் காயல்பட்டினத்தில் தொடர்வதைப் பார்த்து, அந்தப் பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண்கிறோம்...
ஒருவருக்கொருவர் தீண்டத்தகாதவர் என்ற கருத்திலுள்ள முஸ்லிமல்லாத பலர் கூட (அனைவரும் அல்ல!) நம்மவர்கள் நடத்தும் திருமண விருந்தில், அவர்களாகவே விரும்பி ஒரே தட்டில் இணைந்து சாப்பிடுவதைக் காண்கிறோம்.
மனிதன் பிறந்தது முதல் அவனது இறப்பு வரை அனைத்து கால சூழல்களிலும் எவ்வாறு வாழ வேண்டும் என்ற உயர் படிப்பினைகள் இஸ்லாமில் மட்டுமே முழுமையாக உள்ளது என்பதை முஸ்லிமல்லாத பல உலகளாவிய அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கின்ற நிலையில், நேர் தலைகீழாக இங்கிருந்து கருத்துக்கள் வருவது வியப்பளிக்கிறது.
சில தினங்களுக்கு முன்தான் “உலக கை கழுவும் தினம்” என்று அனுசரிக்கப்பட்டு, உணவருந்தும் முன் கை கழுவும் பழக்கம் ஏதோ பொறியியல் கல்லூரியின் முக்கிய பாடம் போல சொல்லிக் கொடுக்கப்பட்டு, அதை படம்பிடித்து செய்தித்தாள்களிலும் வெளியிட்டார்கள்...
அந்த அடிப்படையில் பார்த்தால், ஒப்பற்ற இஸ்லாமிய மார்க்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும் ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலுமே செய்தித்தாளில் இடம்பிடிக்க மிகவும் தகுதியானவையாயிற்றே!
நாம் இன்று நேற்று இப்பாடங்களைக் கற்றவர்கள் அல்ல! 1430 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நமக்கு இந்த படிப்பினை வாழையடி வாழையாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross