செய்தி: வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வகுப்புவாத மற்றும் திட்டம... posted bykavimagan (dubai)[06 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6707
அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்!
எதிர்பார்த்த பதில்களே கிடைத்து இருக்கிறது.அவற்றுள்
நியாயம் என்று நான் நினைக்கும் கேள்விகளுக்கு பதில்
கூறிவிடுகிறேன்.
சகோதரர் இக்ரம் அவர்களே! ஜெயலலிதா ஆதரிக்கின்றாரா
அல்லது எதிர்க்கின்றாரா என்ற கவலை எனக்கு தேவையில்லாத
ஒன்று. ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த ஆயிரத்துஎட்டு
வெங்காய சட்டங்களுள் இதுவும் ஒன்று என்பதை நானறிவேன்.
தொடர்ந்து படியுங்கள்.
சகோதரர் இப்ராஹீம் அவர்களே! உங்கள் ஆதங்கம் நியாயம்
என்றுதான் நானும் சொல்லி இருந்தேன். அதே நேரத்தில்,.ஒரு
பெண்ணை தேர்ந்தெடுப்பதை எப்படி தவிர்க்க வேண்டுமோ அப்படியே
இறைமறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதையும் தவிர்க்கலாமே என்ற
என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
நாம் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில்,நமக்கு வேறொரு CHOICE
இல்லாததால் காபிர்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் எத்தனை
கேடுகெட்டவர்களாக இருந்தாலும் என்ற வாஹித் காக்கா அவர்களது
வைரவரிகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஒருபக்கம் வட்டி மற்றொரு
பக்கம் கொலை, CHOICE இல்லை என்று கூறி இரண்டில் ஒன்றை தேர்ந்து
எடுத்தல் என்பதை ஆதரிக்கும் நல்லவர்களே! இரண்டையும் புறக்கணிக்கும்
மூன்றாவது CHOICE எப்படி கண்ணுக்கு தெரியாமல் போனது. கருணாநிதி
பாசம் கண்ணை மறைப்பதாலா? உதயசூரியனுக்கு வாக்களித்து
ஜெனிபர் சந்திரனை மந்திரி ஆக்கியது சாய்ஸ் இல்லாததாலா?
நிறைவாக சாளை சலீம் காக்கா! இப்படி ஒரு சட்டம் தேவையா என்றால்
தேவைதான். ஆனால் அதனை நேர்மையாக பயன்படுத்துவது யார்?
இதற்கு முன்னாள் உள்ள சட்டங்கள் என்ன ஆயின? பயங்கரவாத
தடுப்புச் சட்டங்களில் பெரும்பகுதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்
மீது பாய்ந்திருப்பது தாங்கள் அறியாததா? இதே மத்திய இஸ்லாமிய
விரோத காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டங்கள், காங்கிரசாலேயே
தவறாக கையாளப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்
இளைஞர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டு, அதனை மூடி மறைக்க
உதவியது இது போன்ற சட்டங்கள்தானே! தடாவும்,பொடாவும் எதற்காக
கொண்டுவரப்பட்டது? ஆனால் யார் மீது பாய்ச்சப்பட்டது? அவ்வளவு
எதற்கு? குண்டாஸ் சட்டம் எதற்கானது? ஆனால் யார் மீது பாய்ச்சப்
படுகிறது. பாபரி மஸ்ஜிதுக்குள் சிலையை வைத்தபோதும், அதனை
ராமர் பிறந்த இடம் என்று கூறி காவி வெறியர்கள் உரிமை கொண்டாடிய
போதும், அங்கே முஸ்லிம்களது உரிமை படிப்படியாய் பறிக்கப்பட்ட
போதும்,பள்ளியை உடைத்து இந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிய
போதும், அதனைத் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான
முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோதும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த
காங்கிரசுக்கு திடீரென்று சிறுபான்மையினரின் மீது என்ன அக்கறை?
ஊழல் சகதியில் சீரழிந்து போன தனது முகத்தை அலசிக்கொள்வதற்கும்,
தனக்கு பிடிக்காத அரசியல் மற்றும் சமூகவாதிகளை பழிவாங்குதற்கும்,
மாநில சுயாட்சிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும்
அன்றி வேறென்ன? நாளை பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தால், காஷ்மீரில்
உள்ள சிறுபான்மை பண்டிட்களை பாதுகாப்பதாகக் கூறி, ஹூரியத்
தலைவர்களை பழிவாங்க இந்த சட்டம் உதவாதா? இந்த சட்டத்தை
ஜெயலலிதா எதிர்த்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும்,கருணாநிதி
இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இருக்கிற சட்டங்களே
துஷ்பிரயோகத்தில் இருக்கும் போது,புதிது புதிதாக சட்டங்கள் வந்து
என்ன செய்யும்?.
சலீம் காக்கா! உங்களது பதிலைப் பொறுத்து இன்ஷாஅல்லாஹ்
தொடர்கின்றேன்.அதுவரையில்..........நன்றி வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross