Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:42:34 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6862
#KOTW6862
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 5, 2011
வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3480 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தேசிய ஆலோசனை குழுவினால் (National Advisory Council) தயாரிக்கப்பட்டுள்ள வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை மசோதாவிற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.

இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.

கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்'.

மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.

மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,

இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது

இப்படிக்கு

P. ஜெய்னுல் ஆபிதீன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணையதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. What Islam says?
posted by Ibrahin Ibn Nowshad (Chennai) [05 August 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6681

Neutral Comment

There is an authentic Hadeeth that " Do not give the commanding/Ameer position to women folks. Beacause of their emotional in nature"

Everyone of us Quetionable in Allah's court for voting AIADMK to choose JJ as Leader.

Allah Allam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by A.W.S. (Kayalpatnam) [05 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6682

Yet another proof that she is an RSS agent in T.N.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by A.W.S. (Kayalpatnam) [05 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6685

Had this law been in force in early 2000s, we would have not lost thousands of our brothers and sisters in Gujarat. Modi must have been behind the bars along with his parivars. Certainly JJ does not want to see her fellow parivars behind the bars.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வருந்தும் நேரம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6689

ஓட்டு போட்ட ஒவ்வொரு இஸ்லாமியனும்தான் செய்த தவறுக்கு வருந்தும் நேரம்தான் இது. தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாத்தின் கண்டனம் பாராட்டப்பட வேண்டியது. கொள்கை கோட்பாடு என்று இந்த விஷயத்திலும் பிரிவினை பார்க்காமல் இஸ்லாத்திற்கு ஒரு தீங்கு என்றால் நாம் எல்லோரும் ஓரணியில் நின்று போராட வேண்டும்.

இப்படிப்பட்ட ஒற்றுமை என்று நம்முள் வருமோ? அல்லாஹ்வே! உனது திருமறையில் அருளிய வாசகத்தின் படியே எங்களை ஓரணியில் திரண்டு நிற்க நீ தான் அருள் புரியவேண்டும். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நுனிப்புல் மேயவேண்டாம்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [06 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6700

பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வருவதனால் உண்டாகும் யதார்த்த பிரச்சனைகளைக் கூறும் நபிமொழியை மேற்கோள் காட்டும் நண்பர், இறைமறுப்பாளர்கள்,இணைவைப்பவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பை வழங்க ஆதரிக்கும் சான்றுகள் உண்டாயின் அதனையும் சமர்ப்பித்தால் நல்லது. இல்லையெனில் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் நிற்க வேண்டி வரும்.

சாளை சலீம் காக்கா! நுனிப்புல் மேயும் மற்றவர்களோடு உங்களது கருத்தை இணைக்காதீர்கள். ஒழுங்காக ஆராய்ந்து எழுதத் துவங்கினால், மிக நீண்ட விவாத களத்தை சந்திக்க நேரிடும்.நோன்பு நேரத்தில் அதை விரும்பமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். காக்காவோடு மோதுவதை இந்தத் தம்பி விரும்பவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by mohammed ikram (SAUDI ARABIA) [06 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6701

நண்பர் கவிமகன் அவர்கள் ஜெயாவின் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிரறா? அல்லது எதிர்கிறாரா? என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by Salai Sheikh Saleem (Dubai) [06 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6703

அன்பு தம்பி கவிமகனாரே, நீங்கள் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் நன்றிகள். நான் இதே வெப் இல் பதிந்திருக்கும் இந்த மசோதாவின் சாராம்சங்களையும் படித்துப்பார்த்தேன். இது சிறுபான்மை சமூகத்தார்களுக்கும் தீவிரவாதத்தால் அநீதி இளைக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நிவாரணமாகவே கருதப்படுவதால் இதை அம்மையார் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற ஆதங்கம் தான் என்னுடையது. அம்மா இதை எதிர்ப்பது நமது சமூகத்திற்கு எந்த அளவில் பயனளிக்கும் என்பதை நீங்கள் பதிவுசெய்தால் ஏனைய வாசகர்களுக்கும் அம்மாவின் சமுதாய நோக்கினை புரிந்து கொள்ள எதுவாய் இருக்கும்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by A.W.S. (Kayalpatnam) [06 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6704

People trying to justify unjustifiable and conveniently forgot the fact that we are living in a country where we are minority and we have no option other than electing Kaffirs (இறைமறுப்பாளர்கள்) and or Mushriks (இணைவைப்பவர்கள்). But we have a choice as far as electing male and or female leader(s) is/are concern.

Asking for Hadiths for electing Kaffirs and Mushriks is uncalled far.

As far the quoted Hadiths is concern the fault is ours for discarding the advice of our beloved Prophet (PBUH) by electing a female and we are paying the price.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நன்றாக உற்று நோக்கவும்
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [06 August 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6705

அன்பு சகோதரர் கவிமகனே!.

நீங்கள் என்னுடைய முதல் கருத்தின் முதல் வரியை விளங்கிக்கொள்ளவில்லை என நினைகிறேன். நடுநிலையான கருத்து என பொறித்து இருந்தேன். ஒரு வரலாற்றை நினைவு கூற விரும்புகிறேன். http://islam101.net/human-relations-mainmenu-27/37-terrorism/264-non-violence-and-islam.html இதை சொடுக்கவும்.

நுனி புல் மேய்ந்த நான்கு மாடுகளும் ஒரு புலியின் பசியும் என சிறு வயதில் பள்ளியில் கதை கேட்ட ஞாபகம்.

அந்த நான்கு மாடுகள் போல் நாமும் இருக்க வேண்டாம். நாமும் அந்த மாடுகள் மாதிரி ஆகிவிட வேண்டாம் என விரும்புகிறேன் என கூறி கவிமகனுக்கு தெரிவித்து கொள்ளவிரும்புவது என்னவென்றால் ஆட்சி பொறுப்பை கொடுப்பவனும் எடுப்பவனும் அல்லாஹ் தான் நம்மை சோதிப்பதற்காக சில இடர்பாடுகளை கொடுக்கிறான் என்பதை மறவாமல். அவனிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதை நினைவு கூற விரும்பிக் கொள்வதோடு மட்டுமல்லாமல். நான் இதுவரை மழைக்கு கூட வாக்குச்சாவடி பக்கம் ஒதுங்கியது இல்லை என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு அறிய தருகிறேன்.

அரசியல், கவிதை, நாடு, மொழி, தந்தை, தாய், உறவுகள் இவற்றை எல்லாம் தாண்டி இஸ்லாம் என்னும் வழியை காதல் செய்வோம். காதலில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், சண்டையும் இருக்கும், சகித்து கொண்டு போகிறோம் அல்லவா? அது போல் தான். இஸ்லாமும் சகிப்பு தன்மை கொண்ட மார்க்கம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வார்த்தை ஜாலம்
posted by இப்னு சாகிப் (Dammam, Saudi Arabia) [06 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6706

இங்கு பலர் இஸ்லாமிய நாட்டில் அமுல்படுத்த வேண்டிய சட்டத்தை, முஸ்லிம்கள் சிறுபானமையினராக இருக்கும் இந்தியாவில் ஒப்பிட்டுகிறார்கள்.

காலம் காலமாக மத்தியில் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டோம். இந்திரா காந்தியின் தலைமையில்தான் காங்கிரஸ் இருந்தது. இன்று சோனியா காந்தியின் தலைமையில் இருக்கிறது. கூட்டணி கட்சிகளும் அவ்வாறே இணைந்து ஆட்சி செய்கிறது. சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு வேறு வழி இல்லை. இருப்பவர்களில் சிறிது நல்லவர்களைத்தான் நம்மால் தேர்வு செய்ய முடியும்.

இந்த சட்டம் முன்பே வந்திருந்தால், குஜ்ராத் கலவரத்தை தடுத்து இருக்கலாம் என்று ஒரு சகோதரர் எழுதுகிறார். உண்மையாலுமே திருவாளர் கருணாநிதி நினைத்து இருந்தால், அன்று கலவரத்தின் தாக்கத்தை குறைத்து இருக்க முடியும். அல்லாமல் திமுக அன்று மத்தியில் ஆட்சி செய்து கொண்டு இருந்த பாஜகவிற்கு முட்டு கொடுத்து கொண்டு இருந்தது. கருணாநிதியிடம் இது பற்றி கேட்ட போது 'அது அந்த மாநிலப் பிரச்சனை என்று சப்பை கட்டினார். ராம் விலாஸ் போன்றவர்கள் எல்லாம் பதவியை ராஜினாமா செய்த போது, பதவி வெறியில் திமுக பாஜகாவுடன் ஒட்டி கொண்டு இருந்தது.

மேலும், திமுக ஆட்சியில்தான் தமிழகம் காணத கலவரம் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்கப்பட்டது. கோவையில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களே அதை யாராலும் மறக்க முடியுமா?

என் பிணத்தின் மீது ஏறி சென்றுதான் முஸ்லிம்களை தாக்க முடியும் என்று கருணாநிதி அடிக்கடி வார்த்தை ஜாலம் செய்வார். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல என்பதை முஸ்லிம்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

எனவே யதார்த்தத்தில் யார் ஆட்சி செய்தாலும் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை என்றே நாம் அணுக வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by kavimagan (dubai) [06 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6707

அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்!

எதிர்பார்த்த பதில்களே கிடைத்து இருக்கிறது.அவற்றுள் நியாயம் என்று நான் நினைக்கும் கேள்விகளுக்கு பதில் கூறிவிடுகிறேன்.

சகோதரர் இக்ரம் அவர்களே! ஜெயலலிதா ஆதரிக்கின்றாரா அல்லது எதிர்க்கின்றாரா என்ற கவலை எனக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த ஆயிரத்துஎட்டு வெங்காய சட்டங்களுள் இதுவும் ஒன்று என்பதை நானறிவேன். தொடர்ந்து படியுங்கள்.

சகோதரர் இப்ராஹீம் அவர்களே! உங்கள் ஆதங்கம் நியாயம் என்றுதான் நானும் சொல்லி இருந்தேன். அதே நேரத்தில்,.ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பதை எப்படி தவிர்க்க வேண்டுமோ அப்படியே இறைமறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதையும் தவிர்க்கலாமே என்ற என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

நாம் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில்,நமக்கு வேறொரு CHOICE இல்லாததால் காபிர்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் எத்தனை கேடுகெட்டவர்களாக இருந்தாலும் என்ற வாஹித் காக்கா அவர்களது வைரவரிகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஒருபக்கம் வட்டி மற்றொரு பக்கம் கொலை, CHOICE இல்லை என்று கூறி இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுத்தல் என்பதை ஆதரிக்கும் நல்லவர்களே! இரண்டையும் புறக்கணிக்கும் மூன்றாவது CHOICE எப்படி கண்ணுக்கு தெரியாமல் போனது. கருணாநிதி பாசம் கண்ணை மறைப்பதாலா? உதயசூரியனுக்கு வாக்களித்து ஜெனிபர் சந்திரனை மந்திரி ஆக்கியது சாய்ஸ் இல்லாததாலா?

நிறைவாக சாளை சலீம் காக்கா! இப்படி ஒரு சட்டம் தேவையா என்றால் தேவைதான். ஆனால் அதனை நேர்மையாக பயன்படுத்துவது யார்? இதற்கு முன்னாள் உள்ள சட்டங்கள் என்ன ஆயின? பயங்கரவாத தடுப்புச் சட்டங்களில் பெரும்பகுதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பாய்ந்திருப்பது தாங்கள் அறியாததா? இதே மத்திய இஸ்லாமிய விரோத காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டங்கள், காங்கிரசாலேயே தவறாக கையாளப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டு, அதனை மூடி மறைக்க உதவியது இது போன்ற சட்டங்கள்தானே! தடாவும்,பொடாவும் எதற்காக கொண்டுவரப்பட்டது? ஆனால் யார் மீது பாய்ச்சப்பட்டது? அவ்வளவு எதற்கு? குண்டாஸ் சட்டம் எதற்கானது? ஆனால் யார் மீது பாய்ச்சப் படுகிறது. பாபரி மஸ்ஜிதுக்குள் சிலையை வைத்தபோதும், அதனை ராமர் பிறந்த இடம் என்று கூறி காவி வெறியர்கள் உரிமை கொண்டாடிய போதும், அங்கே முஸ்லிம்களது உரிமை படிப்படியாய் பறிக்கப்பட்ட போதும்,பள்ளியை உடைத்து இந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிய போதும், அதனைத் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோதும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரசுக்கு திடீரென்று சிறுபான்மையினரின் மீது என்ன அக்கறை?

ஊழல் சகதியில் சீரழிந்து போன தனது முகத்தை அலசிக்கொள்வதற்கும், தனக்கு பிடிக்காத அரசியல் மற்றும் சமூகவாதிகளை பழிவாங்குதற்கும், மாநில சுயாட்சிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அன்றி வேறென்ன? நாளை பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தால், காஷ்மீரில் உள்ள சிறுபான்மை பண்டிட்களை பாதுகாப்பதாகக் கூறி, ஹூரியத் தலைவர்களை பழிவாங்க இந்த சட்டம் உதவாதா? இந்த சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும்,கருணாநிதி இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இருக்கிற சட்டங்களே துஷ்பிரயோகத்தில் இருக்கும் போது,புதிது புதிதாக சட்டங்கள் வந்து என்ன செய்யும்?.

சலீம் காக்கா! உங்களது பதிலைப் பொறுத்து இன்ஷாஅல்லாஹ் தொடர்கின்றேன்.அதுவரையில்..........நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Realization
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [06 August 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6709

"அதே நேரத்தில்,.ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பதை எப்படி தவிர்க்க வேண்டுமோ"

As from the above lines of Bro. Kavimagan. Did you be one of the reason to elect a female? Please answer in a simple one word. Yes or No.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by kavimagan (dubai) [06 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6711

நண்பர் இப்ராஹீம் அவர்களே! இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு பெண்ணுக்கு தேர்தலில் வாக்களிப்பது ஹராமா? ஆம், இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Defending The Aggressive Attacker
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [06 August 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6712

சரி விடுங்க Ego எல்லாவற்றையும். இனி நடக்க போவதை அனைவரும் ஒன்று சேர்ந்து பாப்போம்,

கால்பந்தாட்டத்தில் தடுப்பு ஆட்டகாரர்களே அட்டகாசமான வீரர்கள். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. தற்காப்பு மிகவும் அவசியம்.

JJ or MK both are enemies now. Let us all beware of them by the past election and their ruling strategy.

1."What do we do?"
2."For whom do we do it?"
3."How do we excel?"

Even MK or JJ rule this State both are going to ruin lives and lifes. Let take a strong decission what to do next in upcomming election. Boycott or Vote. Choice is yours.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. விவாதங்களை திசைத் திருப்புவோம் வெற்றிப்பெறுவோம்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [06 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6713

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு சகோதரர்களே!

இந்த ஒரு பிரச்சினையை மிக,மிக முக்கிய பிரச்சினையாக கருதி வாதங்களை தொடர்கிறீர்கள் - அப்படி இதிலே ஏதும் நாம் சாதிக்க முடியும் என்றால் என்னையும் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். இதிலே நாம் சாதிக்க போகிறதற்கு ஒன்றுமில்லை.

வெறுமனே கருத்துக்களை பதிவோம் அதிலே அரசியல் மட்டுமல்ல மார்க்கமும், அரை குறை மார்க்கமும் கலந்து பின்பு அது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் , கடைசியாக அட்மின் இத்துடன் இந்த கருத்து பதிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

கடைசியாக மிஞ்சப்போவது ஒருவருக்கொருவர் அறியாமையால் ஏற்படுத்திக்கொண்ட மனகசப்புக்கள்தான்.

அதனால் தயவு செய்து சகோதரர்களே! நாம் இத்துடன் இதை நிறுத்திவிட்டு இன்றைய தேவைக்கான மூன்று விசயங்களை முன்னிலைப்படுத்துவோமாக.

--------------------------------------------

முதலாவது : அருள்மறை இறங்கிய முபாரக்கான இந்த ரமலான் மாதத்தில் இபாதத்'களை செய்ய முயலுவோம்.

இரண்டாவது ( செய்தி எண் 6826 ) : " நகர்மன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை பற்றிய தீர்மானம் " - இந்த திட்டத்திற்கு எந்த வகையில் எல்லாம் நாம் விவாதிக்க முடியுமோ விவாதித்து - பல ஊர்களிலும் ஏற்பட்டிருக்கிற அதன் தாக்கத்தை அறிந்து, தெரிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துக்கூறி , தடுக்க முயற்சிப்போம்.... இல்லை........ இல்லை தடுத்தேத் தீருவோம்.

மூன்றாவது (செய்தி எண் : 6859 ) : இன்ஷா அல்லாஹ்! வருகிற அக்டோபரில் நகர்மன்றத்திற்கு தேர்தல் வர இருக்கின்றது அதை எப்படி கையாளனும் என்பதை பற்றி விவாதிப்போம் - வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

என்னுடைய அறிவிற்கு இப்போதைக்கு இந்த மூன்றும்தான் முக்கிய பிரச்சினையாக தெரிகிறது ஆகையால் விவாதங்களை திசைத் திருப்புவோம் வெற்றிப்பெறுவோம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by A.W.S. (Kayalpatnam) [06 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6714

Oh son (Kavimagan) of my teacher,

Why did u put words into my mouth which I did not utter?.

I have clearly stated that "We have no choice but to choose from Kaffirs and Mushriks". I never wrote "அவர்கள் எத்தனை கேடுகெட்டவர்களாக இருந்தாலும்".

I mentioned that she is a RSS agent in T.N. I stand by comments made earlier. Here are the proofs.

1) She sent her கூலிப்படை to Ayodhiya to destroy Babri Masjid.

2) She introduced "மதமாற்று தடை சட்டம்" during her previous tenure.

3) When Andhra Pradesh government introduced 5% allotment for Muslims she raised her voice against it.

4) She never fails to invite Modi as Cheif guest for her inaugurations (she attented his functions too).

5) She tried to create unnecessary tension between Muslims and Christians by luring Christians to vote for her by giving them false hope of sending them to Jerusalem like Muslims going to Haj.

(Sending people abroad for pilgrimage has nothing to do with State government. Central govt., knowing very well that it is not obligatory for Christians to go to Jerusalem, it will not heed JJ's request. She can always go back to Christians, 'Look I tried to get this priority, but Union govt., did not favour you as they favouring Muslims).

The list can go on.........

I can not remember anything good she did for our community.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மாமாவின் வழியில்
posted by Salai Sheikh Saleem (Dubai) [06 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6715

அன்பு கவிமகனாரே, விளக்கங்களுக்கு மிக்க நன்றி. நான் எனதன்பு NSE மாமாவின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறேன். தயவு செய்து இத்தோடு முடித்துக்கொள்வோமே. எல்லாம் வல்ல அல்லா இந்த புனித ரமழானின் பொருட்டால் நம்முள் ஒற்றுமை எனும் கயிர் ஊடுருவி பரவட்டும். அன்பர்களே, நம் இளைய சமுதாயதிற்கு கல்வி மற்றும் படித்து விட்டு என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு வழிகாட்டுதல்கள், ஊர் நலம், பாதாள சாக்கடை, நகராட்சி தேர்தல்கள் (இப்போவே எந்த வார்டில் யாரை நிறுத்துவது என்று ரகசிய கூட்டங்கள் ஊரில் நிகழ்வதாக அறிகிறோம்) மக்களே இந்த இணைய தளத்தை இன்னும் நல்ல முறையில் நாம் உபயோகம் செய்து நமதூரை நம்முள் இருக்கும் எதிரிகளிடம் இருந்து காப்பற்றுவோமாக. அல்லாஹ் அப்படியே அருள் புரிவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by syed Ahmed (HK) [06 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6717

கவிமகன் அவர்களின் ஆ தீ மூ கா அனுதாபம் அவரின் உரிமை அதற்காக நியாய தர்மத்தின் வரம்புகளை தாண்டுவது நியாயம் ஆகாது

கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்படும் சிறுபான்மை படுகொலைக்கு எதிராக எந்த சட்டமும் இந்தியாவில் இல்லை. இது சங்க பரிவருக்கு சாதகமாக இருக்கிறது .

மும்பை படுகொலை, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் படுகொலை இன்னும் பல கலவரம் என்ற பெயரில் மூடி மறைக்கபடுகிறது.

எந்த சட்டத்தையும் நிறைவேற்ற மாட்டார்கள் என்றால் அல்லது பலி வாங்க பயன்படுத்துவார்கள் என்ற கோணத்தில் மட்டும் பார்த்தால் நீங்கள் அரசியல் சாசனத்தையும் உங்களின் குடியுரிமையையும் கூட எதிர்க்க வேண்டும்

கருணாநிதி ஜெயலிலதா இருவரும் சமுதாயத்தின் எதிரிகள். ஜெயலலிதா சமுதாய பாதுகாவலர் ரட்சகர் என்று நீங்கள் கூறினால் அவரின் முஸ்லிம் விரோத போக்கிற்கு ஆயிரம் ஆதாரங்கள் சொல்ல முடியும் இந்த படிவிஎர்பை மோடி க்கு பட்டு கம்பளம் விரித்து வரை.

மோடிக்கு பட்டு கம்பளம் விரித்து கூட சமுதாய நன்மை என்று கூற மாட்டிஈர்கள் என்று கருதுகிறேன்

இந்த சட்டத்தின் உள் பிருவுகளை அலசி ஆராய நாம் நேரம் செலவளித்தால் உண்மையான பலன் கிடைக்கும்.

சில சகோதரர்கள் எழுதுவது போல் பெண்ணை தேரது எடுக்க கூடாது, ஒட்டு போடா கூடாது என்பது எல்லாம் விதண்டாவாதம் இது கூறும் சகோதரர்கள் ருபாய் நாட்டையும் உபயகோம் செயக்கூடாது.

பெண்ணை தலைவராக இஸ்லாமிய ஆட்சியில் தேர்ந்து எடுக்க கூடாது நாம் இஸ்லாமிய ஆட்சியின் கேளே வாழ வில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Wrong Identity
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [07 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6718

I think you were asked this because of Wrong Identity

நண்பர் இப்ராஹீம் அவர்களே! இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு பெண்ணுக்கு தேர்தலில் வாக்களிப்பது ஹராமா? ஆம், இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

Anyhow thanks for your comments. I realized the answer for my question in prev comments.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Islamic Ruling
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [07 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6719

We are not under Islamic Ruling. I agree. But I want to ask you something that how our Prophet Sallalhu Alaihiwasalam changed the Jahiliyah world as Isalamic world?

Not an easy. Blood shed with stones, alot of miserables. But we moslem born as moslem simply want to goto Jannah by praying, fasting alone. Until we not try and change ourselves Allah won't make changes with us. A single or one man army won't be suit to execute this. May be we need to loss our lives and lifes. Insha Allah! Allah make this world under Islamic rule, at the same time I didn't forgot the Signs of Qiyamat.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by babu Jamal (India) [07 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6723

அஸ்ஸலாமு அழைக்கும்,

நான் எந்த கட்சிக்கும் சாதமாக அல்ல. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடுதான், அங்கும் பெண்களை பிரதமராக தேர்ந்து எடுத்தார்கள் அதை விட்டுட்டு இஸ்லாமிய ஆட்சி இல்லாத நம் நாட்டை பேசமுடியுமா? நாம் இப்படியே பேசி கொண்டுதான் இருபோம் நம்மிடம் காரியங்கள் நடக்காது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:வகுப்புவாத மற்றும் திட்டம...
posted by அப்துல் காதர் தைக்கா சாஹிப் (Riyadh, KSA) [07 August 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6725

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர்களே பாகிஸ்தான், பங்களாதேஷ் இரண்டும் இஸ்லாமிய நாடு என்று சொல்ல இயலாது, வேணுமென்றால் முஸ்லிம் நாடு என்று சொல்லலாம். அங்கு ஷரீஅத் சட்டம் கிடையாது. பாகிஸ்தானியர் மற்றும் பங்களாதேஷியர் பற்றி கூறினால், எனது இந்த கருத்து அட்மின் அவர்களால் கத்தரிக்க படும். இவர்களை பற்றி அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

அம்மா புகழ் பாடுவோர், நமதூரில் சில ஆண்டுக்கு முன் நடைபெற்ற அந்த துயர சம்பவத்தை மனதில் கொள்ளவேண்டும்.

அய்யா புகழ் பாடுவோர், நம் கோவை சகோதரர்கள் பற்றி சிந்திக்க வேண்டும், இங்கு நடைபெறும் விவாதத்தில் தீர்வு கிடைக்க போவதில்லை.

ஆகவே நமதூர் நலன் கருதி, நமக்குள் சில கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், முஸ்லிம் என்ற ஒரு கூரைக்குள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம். அல்லா நம் அனைவருக்கும் துணை புரிவானாக.

இந்த விவாதத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வந்து, அண்மையில் வெளியான பாதாள சாக்கடை திட்டத்தை பற்றி நாம் விவாதிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved