வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ரூபாய் இரண்டாயிரம் மட்டும் (ரூ.2,000) செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, அனுசரணையாளர்கள் தாமாக முன்வருவது மிக மிகக் குறைவே. எனவே, அனைத்துலக காயலர்களான உங்களையே நாட வேண்டியுள்ளது.
இப்பள்ளிவாசல் நம் நகரின் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், மஹல்லாவாசிகள் மட்டுமின்றி, பிரயாணிகள் உட்பட பலரும் இங்கு நோன்பு துறக்க வருகின்றனர்.
எனவே, அன்பார்ந்த காயலர்களே! தாங்கள் இந்த நன்மையான காரியத்திற்காக அனுசரணையளித்து, அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் அடியிலேயே உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்தால், உங்கள் இல்லம் தேடிச் சென்று தொகையைப் பெற்றுக்கொள்கிறொம்.
இவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் கேட்டுக்கொண்டுள்ளார். |