வெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள் - KAYALPATNAM DIASPORA STUDENTS' MEET- என்ற பெயரில் கடந்த
2008 ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் வாழ் காயலர் தைக்கா உபைதுல்லாஹ் ஆக்கத்தில் உருவாக்கப்பட்ட
இந்நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு போட்டிகள் கடந்த ஜூலை 26 மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தி காயல்
ஃபர்ஸ்ட டிரஸ்ட் செய்திருந்தது. இதில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் வாழும்
காயலர்கள் 90 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் Kayalpatnam.com இணையதளம் மூலமும், நகரின் பிரதான ஸ்தாபனங்கள் மூலமும் பெறப்பட்டன. மார்க்கப்போட்டிகளில் உள்ளூர் மாணவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான
விண்ணப்பங்கள் பள்ளிக்கூடங்கள் மூலமும், மதரசாக்கள் மூலமும் விநியோகிக்கப்பட்டன.
இரு நாட்களாக, LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு - 14 பிரிவாக - ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து
போட்டிகள் நடைபெற்றது.
முதல் நாள்...
(1) COLORING (வண்ணம் தீட்டுதல்) (LKG - UKG ஓர் பிரிவு; வகுப்பு 1, 2 ஓர் பிரிவு)
இப்போட்டிகளுக்கான Outline படம் அரங்கில் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் -
தங்களின் வண்ணம் தீட்டும் உபகரணங்கள் கொண்டு - படத்திற்கு வண்ணம் தீட்டினர். போட்டிக்கான நீதிபதியாக பிரபல ஓவியர் ஏ.லெப்பை சாஹிப்
என்ற ALS மாமா செயல்பட்டார்
(2) DRAWING (படம் வரைதல்) (வகுப்பு 3 - 5)
இப்போட்டிகளுக்கான கரு: இயற்க்கை. படம் வரைய அட்டைத்தாள் அரங்கில் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் அவர்களுக்கு
கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் - தங்களின் வண்ணம் தீட்டும் உபகரணங்கள் கொண்டு படம் வரைந்தனர். போட்டிக்கான நீதிபதியாக பிரபல
ஓவியர் ஏ.லெப்பை சாஹிப் என்ற ALS மாமா செயல்பட்டார்
(3) CREATIVE WRITING (கற்பனையில் கதை எழுதும் போட்டி) (வகுப்பு 6 - 8 ஓர் பிரிவு; வகுப்பு 9 - 12 ஓர் பிரிவு)
மாணவ, மாணவியருக்கு பிரிவு வாரியாக புகைப்படம் அச்சிட்ட தாள் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் - படத்தில் உள்ள
காட்சியினை உள்ளடக்கிய கதை ஒன்றினை மாணவர்கள் எழுத வேண்டும்
(4) STORY TELLING (கதை சொல்லும் போட்டி) (LKG - வகுப்பு 2)
இப்பிரிவு மாணவர்கள் தாங்கள் அறிந்த கதை ஒன்றை - மூன்று நிமிடங்களில் சுவாரசியமாக சொல்ல வேண்டும். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக
ஆசிரியர் ஏ.எல். பஷீருல்லாஹ் மற்றும் இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ. புஹாரி ஆகியோர் செயல்பட்டனர்
(5) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 3 - 5 ஓர் பிரிவு)
இப்பிரிவு மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த தலைப்பில் - மூன்று நிமிடங்கள் பேச வேண்டும். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஆசிரியர் ஏ.எல்.
பஷீருல்லாஹ் மற்றும் இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ. புஹாரி ஆகியோர் செயல்பட்டனர்
(6) ASMA-UL-USANA (இறைவனின் பெயர்கள் - முதல் 25 -அர்த்தத்துடன் மனனம்) (LKG - வகுப்பு 2)
இறைவனின் திருப்பெயர்களில் முதல் 25 வரை மனனம் செய்து - கேட்கப்படும் பெயருக்கு அர்த்தம் கூறும் போட்டி. உள்ளூர் மாணவர்களும்
கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஏ.எஸ்.முத்து அஹ்மத் ஆலிம் மஹ்லரி மற்றும் டிஹெச்.எம். ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்
செயல்பட்டனர்
(7) MEMORISATION OF SMALL SURAS (சூரா அல்லுஹா முதல் சூரா அந்நாஸ் வரை மனனம்) (வகுப்பு 3 - 5)
சூரா அல்லுஹா முதல் சூரா அந்நாஸ் வரை மனனம் செய்து, கேட்கப்படும் சூராவினை இனிதாக ஓதக்கூறும் போட்டி. உள்ளூர் மாணவர்களும்
கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஏ.எஸ்.முத்து அஹ்மத் ஆலிம் மஹ்லரி மற்றும் ஜனாப் அஹ்மத் முஸ்தபா ஆகியோர்
செயல்பட்டனர்
(8) ISLAMIC ESSAY (இஸ்லாமியத் தலைப்பில் கட்டுரை) (வகுப்பு 6 - 8)
என்னை கவர்ந்த ஏந்தல் நபிகளார் - ஒரு வரலாற்று சம்பவ குறிப்புடன் (The Prophet who touched my heart - explained with an example
from Seerah) என்ற தலைப்பில் கட்டுரை 1000 சொற்களுக்கு மிகாமல். உள்ளூர் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்
இரண்டாம் நாள் நிகழ்வுகள் தனிச்செய்தியாக வழங்கப்படும். |