சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 06.08.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நம் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 06.08.2011 சனிக்கிழமையன்று மாலை 04.00 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மன்றத்தால் இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள செயல்திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் தகவலறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, நம் மன்றத்திற்கு உள்ளூர் பிரதிநிதியை நியமிப்பது குறித்தும், பல்வேறு தேவைகளுக்காக உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து இறுதி முடிவெடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்படவள்ளது.
எனவே, மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கி, நம் மன்றத்தின் நகர்நலப் பணிகளை சிறப்புற செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |