வெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள் - KAYALPATNAM DIASPORA STUDENTS' MEET - என்ற பெயரில்
கடந்த ஜூலை 26 மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்றன. நான்காம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சிகளின் முதல் நாள் நிகழ்வுகள்
குறித்த விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
இரு நாட்களாக, LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு - 14 பிரிவாக - ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து
போட்டிகள் நடைபெற்றது.
இரண்டாம் நாள்...
(1) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 6 - 8)
இப்பிரிவு மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த தலைப்பில் - நான்கு நிமிடங்கள் பேச வேண்டும். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஆசிரியர்
ஏ.எல். பஷீருல்லாஹ் மற்றும் இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ. புஹாரி செயல்பட்டனர்
(2) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 9 - 12)
இப்பிரிவு மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த தலைப்பில் - ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஆசிரியர்
ஏ.எல்.பஷீருல்லாஹ் மற்றும் இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ. புஹாரி செயல்பட்டனர்
(3) MEMORISATION OF JUS 30 OF THE QURAN (அம்ம ஜுஸ்வு மனனம்) (வகுப்பு 9 - 12)
அம்ம ஜுஸ்வு முழுவதும் மனனம் செய்து - கேட்கப்படும் சூராவினை ஓதிக்காட்டும் போட்டி. உள்ளூர் மாணவர்களும்
கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளுக்கு நீதிபதிகளாக ஹாபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் ஹாபிழ் மௌலவி எஸ்.ஏ.கே. முஹம்மது மொஹிதீன்
மஹ்லரி செயல்பட்டனர்
(7) QUIZ (வினாடி வினா) (வகுப்பு 6 - 12)
அணிக்கு இருவர் என 7 அணிகள் போட்டியிட்டன. இதில் 3 அணிகள் உள்ளூர் அணிகள். அவை ஜூன் மாதம் நகரில் காயல் நல மன்றம்,
கத்தார் ஏற்பாட்டில் நடந்த நகர் அளவிலான வினாடி வினா போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றவை. ஐந்து சுற்றுகளில் (a la carte Round,
Islam, Current Affairs, Who Am I?, Multimedia) 35 கேள்விகள் கேட்கப்பட்டன. Quiz Master ஆக எஸ்.கே. ஸாலிஹ்
செயலாற்றினார்.
போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள் விபரம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தனி செய்தியாக வழங்கப்படும். |