ப்ரவுசிங் சென்டர்களில் ப்ரவுசிங் செய்பவர்களுக்கு அடையாள குறியீட்டு அட்டை வழங்கும் திட்டம், ஊரக பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க, மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் ப்ரவுசிங் சென்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு அடையாள குறியீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது ஊரக பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கிளிங்க் என்ற நிறுவனம் அனைத்து ப்ரவுசிங் சென்டர்களுக்கும் ஒரே மாதிரியான சாப்ட்வேர்களை வழங்கி உள்ளது. ஒரு ப்ரவுசிங் சென்டரில் அடையாளக் குறீயீட்டுடன் அட்டை பெற்றவர்கள் நாடு முழுவதும் எந்த சென்டரிலும் அதை பயன்படுத்த முடியும்.
அடையாள குறியீட்டு அட்டை பெறாதவர்கள் இனிமேல் பிரவுசிங் சென்டர்களை பயன்படுத்த முடியாது. அட்டை பெற்றவர்கள் எந்த பிரவுசிங் சென்டரில், எந்த தேதியில் ப்ரவுசிங் செய்தனர் என்ற விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க முடியும். தேனி மாவட்டத்தில், இத்திட்டத்தை கூடுதல் எஸ்.பி., செல்வராஜ் துவக்கி வைத்தார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைச்சாமி மற்றும் ப்ரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
நன்றி:
தினமலர் (07.08.2011) |