கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் சுனாமி திட்ட குடியிருப்புகள் - 169 - கட்டப்பட்டு வந்தன. சர்ச்சைக்குள்ளான இக்குடியிருப்புகள், தற்போது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்க்கிடையில், இத்திட்டத்தினை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் (திருநெல்வேலி கிளை) - ஜூன் 6 தேதியிட்ட கடிதத்தினை, காயல்பட்டினம் நகர்மன்றதிற்கு அனுப்பியுள்ளது. அதில் 169 குடியிருப்புகளுக்கும் நகர்மன்றம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க ஆகும் செலவு குறித்தும், தெருவிளக்குகள் அமைப்பதற்காக ஆகும் செலவு குறித்தும் வினவியிருந்தது.
ஜூன் 30 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் இக்கடிதம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. குடியிருப்புகள் குறித்த வழக்கு தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், குடிசை மாற்று வாரிய கோரிக்கையை பரிசீலிக்கத் தேவையில்லை என ஏகமனதாக அப்போது முடிவுசெய்யப்பட்டது.
நகர்மன்ற தீர்மானத்தினை காண இங்கு அழுத்தவும்.
காயல்பட்டின நகர்மன்றம் குறித்த சிறப்பு பக்கங்கள் www.kayalpatnam.com இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் நகர்மன்ற வார்டுகள் குறித்தும், தற்போதைய உறுப்பினர்கள் குறித்தும் (விலாசம், தொலைப்பேசி எண்கள் உட்பட) விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சமீப காலங்களில் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
|