தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டின கிளை சார்பாக ரமழான் பயான்கள் மாதம் முழுவதும் சனி, ஞாயிறு - இரு தினங்களில் - நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இப்பயான்கள், இன்றும் (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடு - அவ்வமைப்பின் காயல்பட்டின மர்கஸ் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் பயானில் - பேச்சாளர் அப்துல் அஜீஸ், மறுமை விசாரணை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்ச்சி இன்றிரவு 10:30 முதல் 11:30 வரை நடைபெறும்.
தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் உள்ளூர் தொலைக்காட்சியான Islam Tv இல் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
தகவல்:
சம்சுத்தீன்,
தலைவர், தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத்,
காயல்பட்டின கிளை. |