சில நேரம் உஷாராக இருக்கிறார்கள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[07 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6727
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கட்டிடப்பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டு ஐந்து மாதங்களாகிறது - கட்டிடப் பணிகளே நடக்காமல் நீதி மன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் இந்நேரத்தில் - வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க ஆகும் செலவு குறித்தும், தெருவிளக்குகள் அமைப்பதற்காக ஆகும் செலவு குறித்தும் நமது நகர்மன்றத்திடம் கேட்பதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது.
கட்டுமானப் பணிக்கான ஒப்புதல் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் இன்னும் சில காரணங்களுக்காகவும் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த மதிப்பீட்டை நகராட்சி அனுப்பினால் அது நமக்கு எதிராகிவிடும்.
ஆகையால் குடிசை மாற்று வாரிய கோரிக்கையை பரிசீலிக்கத் தேவையில்லை என ஏகமனதாக முடிவு செய்து அவர்களின் சூழ்ச்சியை முறியடித்தது பாராட்டுக்குரியது. இருந்தாலும் அங்கே உள்ள அதிகாரிகள் மக்கள் மன்றத்திற்கு மாறாக செயல்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
என்னதான் நமது உறுப்பினர்கள் ஆமை வேகத்திலும், சுயநலத்திலும் வேலை செய்தாலும் இந்த மாதிரி விசயங்களில் சில நேரம் உஷாராக இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross