Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்... posted bykavimagn (dubai)[09 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6760
அன்பான நண்பர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
உங்கள் அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவித்துவிட்டு
தலைப்புக்குள் செல்லலாம் என்று எண்ணுகின்றேன்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெளிநாடுவாழ் காயலர்கள் ஆற்றவேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் முகமாக, உலகம் தழுவிய அளவில் ஒரு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வேறு தலைப்புகளை குறித்து எழுதி கருத்து வேறுபாடுகளை உருவாக்க வேண்டாம் என்ற நல்லவர்களின் உத்தரவிற்கு இணங்கி, தரப்பட்ட
பணியில் மும்முரமாக இருக்கும் இந்த வேளையில், இந்த தீர்ப்பு
வந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு
செயல்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை
எனினும் (இதற்கு எத்தனையோ முன் உதாரணங்கள் இருப்பதை
நண்பர் ஜியா போன்றோர் அறிந்திருக்கக்கூடும்), தீர்ப்பை ஏற்று
அதனை அமுல்படுத்த உத்தரவு பிறப்பித்திருக்கும் அம்மாவின்
முடிவு வரவேற்கத்தக்கது.
இலவச கல்வி குறித்த ஜியா அவர்களின் கருத்து மற்றும் செய்திகள் குறித்த மாறுபாடான விஷயங்களை விவாதிக்க ஆரம்பித்தால் அது நம்மை வெகுதூரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் என்று அஞ்சி எம்.ஜி.ஆர்.. ஆட்சிக்காலத்தில் அவருடன் இருந்ததாக நண்பர் குறிப்பிட்ட
அனைவரும் இன்று கலைஞரின் தம்பிகளாக மாறிவிட்டதை மாத்திரம் பதிவு செய்கிறேன்.
நீதிமன்றத்தில் கிடைப்பது தீர்ப்புதானே ( judgement ) தவிர நீதி( justice ) அல்ல. சமச்சீர் கல்வி என்பது கருணாவின் திட்டம் அல்ல என்பதை இதே வலைதளத்தில் பலமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகும் மூக்கணாங்கயிறு, தூக்கணாங்குருவி என்று எதுகை மோனையாக
எழுதுவது பாதி குடும்பத்தை சிறைச்சாலைகளில் வைத்திருக்கும்
கருணாநிதியை ஆறுதல் படுத்தாது.
உள்ளாட்சித் தேர்தலில் சமூக அக்கறையற்றவர்கள் வராமல் தடுப்பது எப்படி என்ற நமது கருத்து விவாதத்தை துவங்குவோம்.
அட்மின் சார்!
நான் விரும்பும் நகர்மன்றம் கட்டுரைகள் என்னவானது? நகர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சரியான தருனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross