Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர... posted bySyedAhmed (HK)[10 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6786
பாதாழ சாக்கடை திட்டதின் அடிப்படை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. கால ஓட்டத்திற்கு தஹுந்தாற்போல் விஞ்ஞானம் இந்த துறையிலும் மிகவும் வளர்ந்து உள்ளது.
கானை தொறந்து ரோட்டில் விடுவது அல்ல பாதாள சாக்கடை பண்ணியும் நாயும் பெருகுவதற்கு.
100 - 200 மீட்டர் முடுக்கு உள்ள நமது ஊரில் இந்த திட்டம் மிகவும் அவசியமானதே காரணம்.
1. மனித கழிவுகளை மனிதன் அகற்றும் வர்ணாசிரம மனு நீதியை இது ஒழிக்கும். இஸ்லாம் கூறிய மனிதனை மனிதன் மதிக்கும் மாண்பை ஆதரிக்கும்.
2. ராட்சத குலைகள் பொருத்தப்பட்டு அந்த குலைகளுக்கு உள்ளே அமிலம் ஊற்றினாலும் உருகாத கிளாஸ் பைபர் சாப்ட் டியுபே மாட்டப்படும். இதனால் இயந்திரம் கொண்டு அல்லது அமிலம் கொண்டு அடைப்புகளை நீக்க முடியும். இதின் ஆயுள் 80 வருடம்.
3. கழிவுகள் மொத்தமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
4. அங்கு கழிவுகள் பிரித்து எடுக்கப்பட்டு ஏரடோர் என்னும் கருவி கொண்டு ட்கரைக்கப்படும்.
5. கரைத்து எடுக்கப்பட்ட மக்கும் கழிவுகள் Treatment செய்த பின்னர் கடலில் கரைக்கப்படும். இதனால் கடல் வளம் பாதிக்காது பெருகும். கடலில் உள்ள தாவரங்கள் வளரும்.
6. பிரித்து எடுக்கப்பட்ட கழிவுகளில் பிளாஸ்டிக் இருந்தால் அவை மறு சுழற்சிக்கு அனுப்பப்படும் அவற்றில் இருந்து non-foodgrade பூத்கள் தயாரிக்க முடியும்.
7. இதனால் மறு சுழற்சி செய்த தண்ணீர் கடல் ஓர விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
8. உப்பளத்திற்கு உபயோகம் செய்யும் tarpaulin மேலே மக்கும் கழிவுகள் புல்டோசர் கொண்டு பரப்ப பட்டு, சூரிய ஒளியில் காய வைக்கப்படும். அது மிகச்சிறந்த இயற்கை உரமாகும் அதை இன்று சந்தையில் உள்ள செயற்கை உரத்தின் விலையில் இரண்டு மடங்கிற்கு விற்கலாம். வருட Contract போட நிறுவனங்கள் முன் பணம் தந்து போட்டி போடும்.
9. Aeration செய்யும் பொழுது அதில் இருந்து மின்சாரமும் தயாரிக்கலாம்.
இவ்வளவு பயன் உள்ள திட்டத்தை ஆதரிப்பது நமது கடமை. பன்றி நாய் எல்லாம் பூமிக்கு மேல் வாழும் உயிரினங்கள் அவை பூமிக்கு அடியில் காற்று கூட நுழையாத glass - fibre tube உள்ளே வாழ்வதும் இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியம் அற்றது
sewage treatment இல் கட்சி கட்டம் chlorination என்பது ஆகும், cholorine கொண்டு நாற்றத்தையும் பக்டீரியா வையும் சுத்தம் செய்த பின்னர் கடலில் கலக்கப்படும். நம்மூர் கடலில் DCW கலக்கும் chlorine இல் 60 - 80 % இதனால் கரைந்து போகும்.
சுத்திகரிப்பு நிலையமே தனக்கான மின்சாரத்தை தயாரித்து கொண்டு மீதம் உள்ளதை அரசுக்கு விற்க முடியும். BSc வேதியல், BE வேதியல், BE சிவில், Microbiology , Envronmental இன்ஜினியரிங், ஏலெக்த்ரிகல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாப்பை உருவாக்கும், ஊர் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
CFFC இதை ஒரு case study ஆகா எடுத்து படித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
சீனாவின் பெரும் தலைவர் மாவ் செய் துங் சொன்னது போல வெற்று இடத்தை காற்று நிரப்புகிறது. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அப்பொழுது தான் உண்மையான அறிவு சார்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross