செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மீண்டும், மீண்டும் செய்த தவறையே செய்யாமல் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[19 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7019
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
இன்றைய நம் நகராட்சியின் செயல்பாட்டால் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் - அதற்கு காரணம் மக்கள்தான்.
சென்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட்டு நல்ல உறுப்பினர்களை நகர் மன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தால் இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது.
-----------------------------------
மக்கள் மீண்டும் அதே தவறை செய்து அடுத்த ஐந்து வருடங்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காக நம் சகோதரர்கள் பலரும் கலந்து ஆலோசித்து இந்த தேர்தல் வழிகாட்டு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள்.
இது ஏதோ ஒரு சிலரின் சொல்படியோ அல்லது ஒரு கூட்டத்தின் சொல்படியோ இயங்கும் அமைப்பாக இல்லை - நகர மக்களின் ஒட்டு மொத்த குரலாக இருந்து செயல்படும் அமைப்பு என்பதை மக்கள் உணர்வீர்கள்.
இதில் அங்கம் வகித்திருக்கும் சகோதரர்கள் அனைவருமே சுயநலம் இன்றி அல்லாஹ்வை முன்னிறுத்தி, நகர்நலன் ஒன்றை மாத்திரமே கருத்திற்கொண்டு இந்த அமைப்பை துவங்கி இருக்கிறார்கள்.
-----------------------------------
மக்களே !
பொது மக்களாகிய நாம் மீண்டும், மீண்டும் செய்த தவறையே செய்யாமல் , இந்த முறை அவசரபடாமல் தீர ஆலோசித்து நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நகராட்சியை மலரச்செய்வோமாக, அதற்கு வல்ல அல்லாஹ்! அருள் செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross